மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என மேற்கு வங்க விவசாயத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடக்கவில்லை என்று அங்குள்ள இளம் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில், அரசு இந்த வழக்குத் தொடர்பாக தங்களின் கோரிக்கைகளை […]
Month: October 2024

410 முறை வெடிகுண்டு மிரட்டல்! இண்டர்போலிடம் உதவி கேட்கும் இந்தியா!
இந்திய விமானங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் இண்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது. இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் 410க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கும் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், அடிக்கடி விமானங்கள் சோதனையிடப்படுவதால் […]

சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி: ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மீண்டும் எம்.எஸ்.தோனி விளையாடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎஸ் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுகிறார் தோனி என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட், பதிரனா, ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ருத்துராஜ் […]

நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை […]

Tamil Top 10 News: 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு முதல் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரை – டாப் 10 நியூஸ்
28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, ரூ.115 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட டாப் 10 செய்திகளை சுருக்கமாக இந்த தொகுப்பில் காணலாம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

ஆர்ஜே பாலாஜியின் ஹேப்பி எண்டிங்!
நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படமான ஹேப்பி எண்டிங் திரைப்படத்தின் முதற்பார்வை டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆர்ஜேவாக இருந்து தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் ஆர்ஜே பாலாஜி. நயன்தாரா நடிப்பில் இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்திலும் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் கடந்த […]

குழந்தைகளுக்கு பட்டாசு வழங்கி தீபாவளி வாழ்த்து சொன்ன முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, குழந்தைகளுக்கு மகிழ்வுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி. குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பட்டாசுகள் பெட்டிகளை வாங்கிச் சென்றனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தனது வீட்டின் அருகில் வசிக்கும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்து பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்குவதை வழக்கமாக […]

இளையராஜா சிம்பொனி வெளியீட்டுத் தேதி!
இளையராஜா தன் முதல் சிம்பொனி இசையின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான ஜமா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதையும் படிக்க: முகுந்த் வரதராஜனாக வென்றாரா அமரன்? – திரை விமர்சனம்! இந்த […]

கான்பூரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, ஒருவர் காயம்!
கான்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கான்பூர் ஏடிசிபி முகேஷ் குமார் கூறியதாவது: தீபாவளி என்பதால் கான்பூர் சிசாமாவ் பகுதியை சேர்ந்த சுரேந்திரா தனது காரில் சமையல் எரிவாயு உருளை கொண்டு வந்துள்ளார். தனது வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து சமையல் எரிவாயு உருளையை இறக்கும்போது அது வெடித்து விபத்துக்குள்ளானது. இதையும் […]

நிறங்கள் மூன்று அப்டேட்!
நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான ‘நிறங்கள் மூன்று’ படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இதில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இவர் இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்க: இளையராஜா சிம்பொனி வெளியீட்டுத் தேதி! […]

