தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் லாபத்துக்காக தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் ‘நகர நக்சல்கள்’ என்று பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாள் தினம் இன்று. 2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேச ஒற்றுமை தினம் தீபாவளியுடன் இணைந்து வந்துள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மோடி, “பல நாடுகள் பிரிந்து […]
Month: October 2024
ஆர்ஜே பாலாஜியின் ஹேப்பி எண்டிங்!
நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படமான ஹேப்பி எண்டிங் திரைப்படத்தின் முதற்பார்வை டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆர்ஜேவாக இருந்து தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் ஆர்ஜே பாலாஜி. நயன்தாரா நடிப்பில் இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்திலும் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் கடந்த […]

பட்டாசு வெடித்தபோது காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தீக்காயம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கிற நிலையில் இருப்பதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.31) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி அரசு விடுமுறை நாளில் பணியில் உள்ள […]

முகுந்த் வரதராஜனாக வென்றாரா அமரன்? – திரை விமர்சனம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோதே இக்கதை, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உயிர்நீத்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனுடையது என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, படக்குழுவும் அதை உறுதி செய்தது. சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் முகுந்த், அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். திறமையான மாணவராகத் தேர்வில் வென்று இராணுவத்தில் இணைகிறார். இதற்கிடையே, தன் […]

மின்சாரம் தாக்கி பலியான காவல் ஆய்வாளர்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (36) வியாழக்கிழமை(அக். 31) அதிகாலை சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு […]

தமிழ்நாடு நாள்: உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க வேண்டும் – ராமதாஸ்
சென்னை: தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் […]

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என்றும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து இல்லாமல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு பேசிய பிரதமர் மோடி, “இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக நாங்கள் உழைத்து […]

தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கம்
புதுதில்லி: பண்டிகைக் கால நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு, இதே பண்டிகைக் காலத்தில் சுமார் 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் கால நெரிசலை குறைக்கும் வகையில் ரயில் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பண்டிகைக் காலங்களில் ரயில் பயணிகளின் நெரிசலைக் […]

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ: பொருள்கள் எரிந்து நாசம்
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் லாரி தண்ணீரை கொண்டு தீயை அனைக்க போராடினர், ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் […]

சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: “எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க. நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து […]

