உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர். 14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் குகேஷ் தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்று டிராவிலும், மூன்றாவது சுற்றில் […]
Month: November 2024

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர்.10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபென்ஜால் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால […]

வேகமாக நிரம்பினாலும் பாதுகாப்பான அளவில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தி உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தாலும் பாதுகாப்பாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், செம்பரம்பாக்கம் ஏரி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் […]

ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா – 2!
புஷ்பா – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: குட் பேட் அக்லி வெளியீட்டில் மாற்றம்? ஆனால், தற்போது […]

ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து
ஜோலார்பேட்டை-சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று செல்ல வேண்டிய ரயில் ரத்தான நிலையில் மறுமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் இந்த ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோரக்பூர்-திருவனந்தபுரம், தன்பாத்-ஆலப்புழா ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் […]

கோவையில் டிச. 1 – 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடக்கும் நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளை முதல் மூன்றாம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை மற்றும் […]

கரையைக் கடக்க தொடங்கியது ஃபென்ஜால் புயல்
வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையைத் தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரக்காணம் அருகே கரையைக் கடக்க தொடங்கிய ஃபென்ஜால் புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. அடுத்த 3-4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருகிறது. Disclaimer :- […]

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்!
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு ஆஸ்திரேலிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். ஜனவரி மாதத்தில் குறிப்பாக தமிழர்கள் தைப்பொங்கல் கொண்டாடுவதைக் குறிப்பிட்ட அவர், ”சூரியன், நிலம், மழை, விவசாயம் போன்றவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் அறுவடை நாள்களாக […]

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்
உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஹ்ரைச்-ஷ்ராவஸ்தி சாலையில் கிலாவுலா மற்றும் இகோவுனா இடையேயான இடத்தில் மதியம் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை […]

90 கி.மீ. தொலைவில் ஃபென்ஜால் புயல்!
சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அம்மையம் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது. கரைக்கு அருகே […]

