நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையும் […]
Month: November 2024

சென்னையில் 55 விமானங்கள் ரத்து
புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரவு 7.30 மணி வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து […]

சம்பல் மாவட்டத்துக்குள் வெளி நபர்கள் நுழையத் தடை நீட்டிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி நபர்கள் நுழைவதற்கானத் தடையை நீடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், சம்பல் மாவட்டம் முழுவதும் […]

இருவரி கவிதைக்குச் சிறையா? பர்ஷாஸ்ரீ புராகோஹைன்! கவிதைதான் குற்றம் – 8
“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று முன்தோன்றி மூத்த நம் தமிழை, நெஞ்சுயர்த்திப் போற்றுவான் பாரதி. முன்தோன்றியதானாலும், இன்றும் குன்றாது வியக்க வைக்கும் “சீரிளமைத் திறம்” மிளிரும் தமிழின் ஒற்றை வரிச் ‘சொற்கூர்வேல்’ ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனும், ஒன்றே முக்காலடியாலே உலகளந்து ஓங்கிநிற்கும் திருக்குறளும் பூர்விக பாத்தியதையாய்ப் பெற்றுச் சர்வ சுதந்திர சுகஜீவனமாக ஆண்டனுபவித்து வருபவர்கள் நாம். ஆதலால், கவிதைகள் ஆழமாக, அடர்த்தியாக இருப்பதற்கும், அவற்றின் […]

கோவை உக்கடம் மேம்பாலத்தில் விரிசலா..? தீயாக பரவிய வீடியோ… – நெடுஞ்சாலைத்துறை விளக்கம்
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் வகையில் கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் 3.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.470 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். கோவை உக்கடம் மேம்பாலம் பொதுவாக கோவையில் கட்டப்படும் பாலங்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும். அந்த வகையில் உக்கடம் பாலத்தில் திறக்கப்பட்ட மேம்பாலம், சில மாதங்களிலேயே விரிசல் விட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் […]

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள் | ஃபெஞ்சல் புயல் தாக்கம்
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (டிச.1) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் […]

கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
பயிற்சியாளராக பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள்ளாக கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி வரலாற்று தோல்விகளை சந்தித்து வருகிறது. இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்! […]

இலங்கையில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு!
வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போல் இலங்கையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அங்கு மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல ஊர்களில் சாலைகள் முழுகியிருப்பதால் போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. நிவாரணப் பொருள்களும் தாமதமாகக் கிடைப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனமழையால் உருவான வெள்ள […]

டங்ஸ்டன் சுரங்க ஏலம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்- அமைச்சர் துரைமுருகன்
மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக எதிர்க்கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் அளித்துள்ளது. இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் […]

கோவா முதல்வரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது
கோவா முதல்வரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் உடனடியாக மீட்கப்பட்டது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு(ஜிமெயில் கணக்கு) சனிக்கிழமை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அதனை மீட்க காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உடனடியாக செயல்பட்டது. டங்ஸ்டன் சுரங்க ஏலம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்- அமைச்சர் துரைமுருகன் பின்னர் மின்னஞ்சல் நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது என்று மூத்த அதிகாரி ஒருவர் […]

