Sorting by

×

வயநாடு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைக்கத் தயார்: பிரியங்கா

மலையகத் தொகுதி மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பணியைத் தொடங்கத் தயார் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை கூறினார். வயநாடு மக்களவைத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாகக் கேரளம் வந்துள்ளார் பிரியங்கா காந்தி. வயநாடு திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அங்குள்ள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்றும் அவர் கூறினார். கரிப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் இங்குத் திரும்பி வந்ததில் […]

சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்!

மகாராஜா படத்தின் சீன மொழி வெளியீட்டின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது. திரையரங்க வெளியீட்டில் ரூ.110 கோடியையும் ஓடிடியில் பரவலான கவனத்தையும் பெற்றது. முக்கியமாக, பாலிவுட்டில் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்புக் கிடைத்தது. இதையும் படிக்க: சூர்யா – 45 படத்தில் ஸ்வாசிகா! இந்த நிலையில், சீனாவில் இப்படம் 40 ஆயிரம் திரைகளில் நேற்று […]

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்?: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மதுரை அரிட்டாப்பட்டி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல நாடகம் நடத்தும் திராவிட மாடல் அரசை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி […]

முதல் டெஸ்ட்: மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கிளன் பிளிப்ஸ் 58 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் […]

100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்: இன்று மாலை கரையைக் கடக்கிறது

சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல் நிலைகொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் கடக்கிறது   Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் “ஃபென்ஜால்” புயல்”: 7 நாள்களுக்கான மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மாமல்லபுரம் வருகை தந்துள்ளனர். கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு […]

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?

விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது. இதையும் படிக்க: சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்! ஆனால், டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் […]

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை உருவான “ஃபென்ஜால்” புயல்” மாமல்லபுரம்-புதுச்சேரிக்கு இடையே சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) கரையைக் கடக்கக் கூடும் எனவும், இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், […]

“மழைநீர் வடிகால் பணிகள் ‘வெற்று விளம்பரங்கள்’ என்பதைக் காட்டும் சென்னை சாலைகள்” – இபிஎஸ்

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக […]

ஃபெஞ்சல் புயல் அப்டேட்: இரு தினங்களுக்கு எங்கெல்லாம் ரெட் அலர்ட்?

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 […]