Sorting by

×

`ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத் தூண் அமைக்க தடையில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத்தூண் அமைப்பதற்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தனியார் நிலத்தில் ஒருவரின் சிலை வைப்பது அவரவர் விருப்பம் என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், நெக்குண்டி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி படம் பொறித்த நினைவுத்தூண் ஒன்றை நிறுவ திட்டமிட்டார் 2021ல் தர்மபுரி மாவட்டத்துக்குட்பட்ட […]

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கம் அதிகம் என்பார்கள். அப்படி இருக்கையில், மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தைச் சேர்ந்த 300 பேர் விஜய்யின் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 2026 சட்டப்​பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மாநிலம் முழுவதும் உறுப்​பினர் சேர்க்கையை தீவிரப்​படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சினிமா இயக்குநர் மாரி செல்வ​ராஜின் சொந்த […]

அம்மா உணவகங்களில் இலவச உணவு: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழகம் மற்றும் […]

ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேனுக்கு முன்னாள் ஆஸி. கேப்டன் அறிவுரை!

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேனுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் […]

கனமழை: சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர். வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக […]

வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோஷூட் விளம்பரங்கள்: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதையும் படிக்க | புயல் இன்று இரவு அல்லது […]

சூர்யா – 45 படத்தில் ஸ்வாசிகா!

சூர்யா – ஆர். ஜே. பாலாஜி படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது. நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடரந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதையும் படிக்க: கொட்டுக்காளி திரைப்படத்துக்கு […]

அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்! முதல்வர் உத்தரவு

புயல் மற்றும் கனமழையால் அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை புறநகர் மற்றும் அனைத்து பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த […]

“திமுக போல விருந்து போட்டு சாப்பிட்டு விட்டுபோகும் கூட்டம் அல்ல” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது; சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வாடகைக் கட்டணத்தில் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு மத்திய அரசைத் தொடர்புகொண்டு ரத்து […]

`NO சொன்ன சீமான்’ – தவாக உள்ளிட்ட தமிழ்தேசிய இயக்கங்களை இழுக்கும் அ.தி.மு.க?

2026 சட்டமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கும் அ.தி.மு.க, தமிழ்தேசிய இயக்கங்களை கூட்டணிக்குள் கொண்டுவரத் திட்டமிடுவதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தொடங்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதாம் அ.தி.மு.க தலைமை. வேல்முருகன் நம்மிடம் பேசியவர்கள் “2016 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அரசியலுக்கு என்டரி கொடுத்த நாம் தமிழர் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக வளர்ந்து நிற்கிறது. தி.மு.க […]