கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். மும்பை அணியில் அஸ்வினி குமார் என்பவருக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் ஒரேயொரு மாற்றமாக மொயின் […]
Month: March 2025

கைவிடப்பட்ட பாகிஸ்தான் – வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் […]

ஏப்ரல் – ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் – ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது. ‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்யில் காட்டமான சீதோஷ்ணம்’ இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் ஏப்ரல்முதல் ஜூன் வரை, அதிக நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 4 முதல் 7 நள்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் நிலவும். இந்த நிலையில், நிகழாண்டில் […]

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி
புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன், கம்யூனலைசேசன்)’ ஆகியவற்றுக்கானதொரு கருவியாக, கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார். “கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, கல்வியில் தமது மூன்று முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே தீவிரமாக இருப்பதை அறிய முடிகிறது. ‘கல்வியில் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு […]

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பொறுப்பு கேப்டனான ரியான் பராக்கிற்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 3 போட்டிகளில் தலைமை வகித்த 23 வயதான ரியான் பராக் மெதுவாக பந்துவீசியதற்காக ரூ.12 லட்சம் அபராதம் […]

நம்பமுடியாத ஆட்டம்; நிதீஷ் ராணாவுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதீஷ் ராணா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடியதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க […]

இந்தியாவில் இப்படியும் கிராமங்களா? பார்த்தால் அசந்து போய்டுவீங்க
டிஜிட்டல் முதல் பாதுகாப்பு வரை இந்தியாவின் மிகவும் வளர்ச்சி பெற்ற 7 கிராமங்கள் எவை தெரியுமா? Do you know which are the 7 most developed villages in India, from digital to security? Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NATIVEPLANET

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!
எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் – பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய சாதனைகள் நிகழவில்லை. இருப்பினும், இதுவரை ரூ. 160 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் […]

1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!
இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்வோர் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்பட 10 அணிகள் விளையாடும் 18-வது ஐபிஎல் தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி கோலாகமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வெளியேயும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை போட்டியின் போது சென்னை அணி ரசிகரை ஒரு கும்பல் தாக்கிய […]

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! எப்படி? ஏன்?
மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய சேவைக்கு 3.3 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் அலைவரிசையே தேவையானதாக உள்ள நிலையில், ஜியோ நிறுவனம் 26 ஜிகாஹெர்ட்ஸ் திறனுடன் இணைய சேவையை மேம்படுத்தியுள்ளது. இவை பெரும்பாலும் தனிநபர்களுக்கான பயன்பாட்டில் பொருந்துவதில்லை; பெரு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய அடர்த்தியான அலைவரிசையுடைய இணைய சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. […]

