Sorting by

×

காஷ்மீர்: இந்தியாவுக்காக வீர மரணமடைந்த மகன்; நாடுகடத்தப்படும் சூழலில் தாய் -அதிகாரிகள் எடுத்த முடிவு

இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையேயான உறவு, அரசுகளுக்கிடையேயான உறவிலிருந்து மாறுபட்டது. அட்டாரி – வாகா எல்லை நீண்டநாள்களாக மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் பாதையாக இருந்தது. இன்று மீண்டும் நாட்டு மக்களை பிரிக்கும் தடுப்பாக மாறியிருக்கிறது. காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டது இந்திய அரசு. இதனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கும் அவர்களது உறவுகளை விட்டு, குடும்பங்களை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முதாசிர் அகமது […]

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குமார், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று (ஏப். 30) காலை அனுமதிக்கப்பட்டிருந்தார். தில்லியில் பத்ப பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டு நேற்று மாலை சென்னைக்குத் திரும்பிய அஜித் குமாருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான […]

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு விடுதி உரிமையாளர்களும், ஜம்மு – காஷ்மீர் விடுதி அமைப்பினரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீருக்கு வருகைத்தரும் சாத்தியமான பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து ஜம்மு – காஷ்மீர் விடுதி கூட்டமைப்பின் தலைவர் முஷ்டாக் சையா பேசியதாவது, காஷ்மீரில் 48 […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் பாடம் திரையரங்குகளில் நாளை (மே.1) வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. ”அன்பை, அறத்தை போதிக்கக்கூடிய […]

உண்மையான ஆட்டநாயகன் இவர்தான்..! பெருந்தன்மையாக நடந்துகொண்ட பிஎஸ்ஜி வீரர்!

சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணியின் ஆட்ட நாயகன் தானில்லை கோல் கீப்பர்தான் என விடின்ஹா கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கின் ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியின் முதல் 4ஆவது நிமிஷத்திலேயே பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பேலே கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியின் விடின்ஹா ஆட்டநாயகன் விருது […]

அனிருத் குரலில் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல்!

நடிகர் கவின் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சின்ன திரை மூலம் பிரபலமாகி வெள்ளித் திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் கவின். பிக் பாஸ் மூலம் மற்றொரு பரிமாணத்தை அடைந்த அவர், அதன் பின்னர் நடித்த லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், அவர் நடித்து வெளியான ’ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் தயாரித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடி-யில் வெளியான […]

சாதிவாரிக் கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி! – முதல்வர் ஸ்டாலின்

சாதிவாரிக் கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், அவரின் தலைமையில் இன்று (ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக […]

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை ஏற்றது பாஜக – ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று (ஏப். 30) நேரில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்துப் பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது, ”சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு […]

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, “சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத்தான், ஒவ்வொரு நபரின் முன்னேற்றத்தையும் முழுமையாக உறுதிப்படுத்த முடியும். மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்க, பட்ஜெட் ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது’’ என்று தெரிவித்தார். சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது ஒரு பெரிய தேர்தல் பிரச்னையாகவும் உருமாறியது. பிகார், […]

ஒசகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன. தற்போது, 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா அறிவித்துள்ளது. இந்த விருதுப் பட்டியலில் சிறந்த நடிகர் விருதினை நடிகர் அஜித் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட […]