Sorting by

×

சாதனை படைத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் இடம் பிடித்த சாய் சுதர்சன்!

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த வரிசையில் 3-ஆவது இந்தியராக 700 ரன்களை கடந்து சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார். […]

மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடிக்க வேண்டும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்பை (வலியை) அவர்கள் மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக, சமீபத்தில் 1,032 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தனது மாதவிடாய் வலியை, தனக்கு நெருங்கியவர்கூட (ஆண்) விரும்புவதில்லை என்று மூன்றில் இரண்டு பெண்கள் கூறியதுதான் கவலையை ஏற்படுத்துகிறது. இந்த […]

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் ‘ரசவாதி’

‘ரசவாதி’ திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் – நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவாக உருவான திரைப்படம் ‘ரசவாதி’. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவராக நடித்திருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

இந்தியா – பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மூலமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் 4 நாள் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய – பாகிஸ்தான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு […]

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று(மே 30) செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “கேரளத்தில் குறைவான எண்ணிக்கையிலே(727 பேர்) கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை காலை 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! இந்த யோகா நிகழ்ச்சி ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வினை […]

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் அண்ணாமலை ரகுபதி, வட்டாட்சியர் எம்.சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 […]

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் இன்று (மே 31) தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய பரவலில், தில்லியில் முதல்முறையாக கரோனா பாதிப்புக்குள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அம்மாநிலத்தில் தற்போது 294 பேர் கரோனா பாதிப்புக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பெண் குடல் […]

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று ராமதாஸை சந்திக்கச் சென்று கொண்டிருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களை சந்தித்த போது, காலச்சூழலால் பாமகவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலக்கட்டம். உள்கட்சிப் பிரச்னையை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றிய நான் பாமக சிதற […]

உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமாகிய நடிகை ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் 2006-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள். தற்போது, தியா தனது உயர்கல்வியை மும்பையின் பிரபலமான சர்வதேச பள்ளியில் முடித்துள்ளார். இதன் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மகளை நினைத்து தானும் தனது பெற்றோரும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். நடிகர் சூர்யாவும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். […]