சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும், ஒரு நாளில் பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் […]
Month: May 2025

உ.பி: திருமணத்திற்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி, 6 பேர் காயம்
ஹர்தோய்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம், பாட்டியானிம் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாலி கிராமத்தினர் பங்கேற்றுவிட்டு எர்டிகா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்! அப்போது, மஜ்ஜிலா காவல் […]

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்!
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோல் மற்றும் மருந்து செலுத்துவதற்காக கையில் போடப்பட்டிருந்த டேப்பை மாற்றும் போது குழந்தையின் கை கட்டைவிரலை செவிலியர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30)- நிவேதா (24) தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24 ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் […]

பிரதமர் மோடி பெயரை மறந்த நிதிஷ் குமார்: சுதாரித்துக்கொண்டு மாற்றி பேசி சமாளிப்பு! – வைரல் வீடியோ
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தலுக்கான பரப்புரையை பா.ஜ.க திட்டமிட்டு தொடங்கிவிட்டது. நேற்று பிரதமர் மோடி பீகாருக்குப் பயணம் மேற்கொண்டார். காரகாட்டில் நடந்த பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார். மோடி – நிதிஷ் குமார் அந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது நிதிஷ் குமார் உரையாற்றும் போது, பிரதமர் மோடியைக் குறிப்பிடுவதற்கு பதிலாக பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி பிரதமர் மோடியின் பெயரை […]

அம்பேத்கர் சிலையை அவர் திறப்பதா? – உதயநிதிக்கு எதிராக உஷ்ணமான விசிக!
திமுக கூட்டணியில் விசிக நீடித்து நிலைக்குமா நிலைக்காதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை முனவைத்து திமுக-வுக்கும் விசிக-வுக்கும் கசகல் வெடித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலையோரத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அப்பகுதியில் உள்ள பட்டியலினத்து மக்கள் முடிவெடுத் தார்கள். இதற்காக சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையும் தயாரானது. இந்த நிலையில் மே 23-ம் தேதி, கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள மங்களாகோவிலில் மாநில அளவிலான கபடி போட்டிகளை நடத்தியது திமுக. […]

பழனிசாமியை எதிர்த்து செல்வகணபதியை நிறுத்துகிறதா திமுக? – சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணி
ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது திமுக தலைமை. Disclaimer :- […]

அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 31) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, […]

சிகிச்சையில் கவனக்குறைவு; வெட்டப்பட்ட பச்சிளம் குழந்தையின் விரல்- வேலூர் அரசு மருத்துவமனை அதிர்ச்சி!
வேலூர் முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விமல்ராஜ் (வயது 30). இவரின் மனைவி நிவேதா (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிவேதாவுக்கு கடந்த 24-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அழைத்துசென்று சேர்த்தனர். நிவேதாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் பேறுகால பின்சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று நர்ஸ் ஒருவர் குளுக்கோஸ் […]

‘அது குடும்ப பிரச்னை, அதனால்…’- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று(மே31) சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், “திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. குறித்த கோரிக்கையை காங்கிரஸ் முன் வைக்கவே இல்லை. அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. திமுக, காங்கிரஸ் இடையே நல்ல உறவு இருக்கிறது. சசி தரூர் சசி தரூர் சிறந்த சிந்தனையாளர், 4 முறை எம்.பி-யாக தேர்வானவர். அவருக்கு கட்சி உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். பாஜக-வுக்கு தமிழக மக்களிடம் பெரிய அளவு ஆதரவு இல்லை. அண்ணாமலை இருந்தபோது பாஜக […]

பாமக : அப்பா – அம்மாவுக்கு பாராட்டு – Anbumani புது Strategy! | TVK VIJAY |Imperfect Show 30.5.2025
* நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை? * MLA பதவியை ராஜினாமா செய்வேன் – அருள் * மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி இன்றும் ஆலோசனை? * மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும் விஜய்… ஹைலைட்ஸ்! * பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது – தமிழ்நாடு அரசு விளக்கம் * மதுரை: மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! – மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன? * ராஜ்யசபா சீட் தருவதாகப் பேசப்பட்டது – துரை வைகோ * 7ஆவது […]

