Sorting by

×

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கோரி  வழக்கு

சென்னை: நாளை (மே 31) ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவள்ளுவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடத்துநராக பணியில் சேர்ந்தேன். கடந்த […]

பாதாள சாக்கடை மாதாந்திர கட்டணம் பல மடங்கு உயர்வு – நெல்லை மக்கள் அதிர்ச்சி

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை சேவைகளுக்கான மாதாந்திர கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1998 (தமிழ்நாடு சட்டம் 1999) பிரிவு 199 (1)-ன் துணைப் பிரிவின் கீழ் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரில் இதுவரை குடியிருப்பு இணைப்புகளுக்கு ஒருமித்த தொகையாக ரூ.40 ஆக இருந்த மாதாந்திர கட்டணம், தற்போது 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, […]

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இந்நிலையில், கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக நேரடியாக அறிவிக்கப்படவில்லை. […]

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: […]

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேனாம்பேட்டையில் இருந்து தி.நகர் திலக் நகர் தெருவில் உள்ள முகவரி இடம் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், 2024, டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். […]

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்ற வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர் பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இந்த பிரசார நடைப்பயணத்தின்போது, வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு குங்குமம் வழங்கவும் பாஜகவினர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. கட்சியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், குங்குமம் வழங்கும் திட்டம் முறையானதல்ல என்று பாஜக மீது […]

ரோஹித் சர்மா அதிரடி; ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா சாதனை பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் மும்பை […]

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மகாராஷ்டிரத்தில் 467 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வரும் […]

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்காக இதுவரை 45 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 143 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட் […]