Sorting by

×

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனமானது ரூ.1,989.69 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதே வேளையில், மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15.55 சதவிகிதம் குறைந்து ரூ.343.66 கோடியாக இருந்த நிலையில் அதன் மொத்த செலவுகள் 2.16 சதவிகிதம் குறைந்து ரூ.417.16 கோடியாக இருந்தது. இதற்கிடையில் […]

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில் மறுப்பு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. மும்பை அணி குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றது. இந்தப் […]

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக இருந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி நிவேதா தம்பதியருக்கு, அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 24 ஆம் தேதியில் ஆண்குழந்தை பிறந்தது. இருப்பினும், பேறுகால சிகிச்சைக்காக […]

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிமல் மொண்டல் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது உறவுக்காரப் பெண்(மைத்துனி) நிதா மொண்டலைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அந்த நபர், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபரும் அந்த […]

நானும் அம்மாவும் பெருமையடைகிறோம்… மகனை வாழ்த்திய தனுஷ்!

தன் மகன் உயர்கல்வியை முடித்ததற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தற்போது, ஹிந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுபோக, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். இதனால், அடுத்த சில ஆண்டுகளுக்கு தனுஷ் பிசியாகவே இருப்பார். இந்த நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா தன் உயர்கல்வியை நிறைவு […]

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! – பிரதமர் மோடி

துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற 18 ஆம் நூற்றாண்டின் மால்வா ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற ராணி லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பாகிஸ்தான் மறைமுகமாகப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்காது. […]

முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி […]

‘தமிழக கோயில்களில் பொருளாதார தீண்டாமை திணிப்பு’ – இந்து முன்னணி கண்டனம்

திருநெல்வேலி: “சிறப்புக் கட்டணங்கள் என்ற பெயரில், பொருளாதார தீண்டாமையை இந்து கோயில்களில் திணிப்பது சாபக்கேடு. பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் இந்துசமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோயிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி, கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆர்சிபி வெல்ல, எலிமினேட்டரில் மும்பை வென்றது. எலிமினேட்டரில் மும்பைக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம், அதிக விக்கெட்டுகள் (25) எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். 15 போட்டிகளில் விளையாடி பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை எடுக்க, நூர் […]

நடிகர் கமலுடன் முத்தக்காட்சி… அபிராமி விளக்கம்!

நடிகர் கமல் ஹாசனுடன் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து அபிராமி விளக்கமளித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புரமோஷன்களும் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் சில விமர்சனங்களும் எழுந்தபடியே உள்ளது. அப்படி, தக் லைஃப் டிரைலரில் நடிகை அபிராமியைக் கமல்ஹாசன் முத்தமிடும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்தவர்களில் சிலர், […]