ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக்கியுள்ளனர். பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து புதிய சோப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை அமெரிக்க மதிப்பில் 8 டாலராக (இந்திய மதிப்பில் ரூ. 684) நிர்ணயித்துள்ளனர். மிகவும் குறைந்தளவிலாக 5,000 எண்ணிக்கையில் மட்டுமே இந்த சோப் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், […]
Month: May 2025

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, […]

சத்தீஸ்கர்: நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தின் தம்பயா கிராமத்தைச் சேர்ந்த விவேக் தோதி (வயது 17), கோட்டே ஜோகா (45) மற்றும் பட்டே சுனில் (20) ஆகிய மூவரும் பண்டேபாரா கிராமத்தை நோக்கி இன்று (மே 30) காலை நடந்துச் சென்றுக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நக்சல்கள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுக்கு அருகில் அவர்கள் எதிர்பாராத விதமாகச் சென்றுள்ளனர். அப்போது, அந்தக் குண்டு வெடித்து […]

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியாக 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி அதிகமாக உள்ளதாகவும் எனவே அதனைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் நீண்ட நாளாக கோரி வந்தனர். இந்த கேளிக்கை […]

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். தொடர்ந்து, கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத விளையாட்டு தற்போது நிறுத்தப்பட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை எச்சரிக்கிறேன். மேலும், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களையும் இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான […]

வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!
தொடர் மழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால்; இன்று (மே 30) அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகக் கூறப்படுகிறது. மிசோரம் மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்சால் மாவட்டத்தில், இன்று (மே 30) காலை பெய்த கனமழையால், அங்குள்ள ஓர் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்து […]

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த பில் சால்ட்!
ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. […]

துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!
துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் – ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில் வெளியானது. ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார். இந்தப் […]

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!
நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் மூழ்கியுள்ளன. இதில், தற்ப்போது வரை 88 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாணமை அதிகாரி ஒருவர் […]

மீண்டும் மீண்டுமா? ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ கவலை
நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. 2024 – 25ஆம் நிதியாண்டில் மட்டும் நாட்டில் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகம் என்றும் ஆர்பிஐ வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்ல, வேறெந்த ரூபாய் நோட்டுகளையும் விட 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1.18 […]

