Sorting by

×

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றமான சூழல்கள் நிலவி வந்தன. மேலும், தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென பாகிஸ்தான் அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்த்து, அரசு முறை உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. பாகிஸ்தானின் […]

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பைவிட 97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் சென்னையில் இயல்பைவிட 129% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் சென்னையில் ஒருநாள்கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொடவில்லை. அதிகபட்சமாக மே 4, 5 தேதிகளில் […]

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்டுமின்றி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்ட நிலையில், 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பலம் வாய்ந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளும் குவாலிஃபையர் 2 ல் விளையாடவிருக்கிறது. இதனால், ஆர்சிபியுடன் […]

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த […]

மதுரையில் முதல்வரின் மாபெரும் சாலைப் பேரணி!

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு […]

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகள்: சென்னையில் தவாக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய விதிமுறை ரத்து […]

“ராமதாஸும் அன்புமணியும் பொழுதுபோக்கு காட்டுகிறார்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி

சாத்தூர்: “பாமக ஒரு சாதி கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக இதைச் செய்கிறார்கள்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் திறப்பு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு நிழற்குடை மற்றும் கலையரங்கத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் […]

தக் லைஃப் முன்பதிவு எப்போது துவங்குகிறது? அறிவிப்பு!

தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு நாளை (ஜூன் 1) காலை 8.01 மணிக்கு துவங்கும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் சிம்பு உள்பட பல நட்சத்திர […]

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் […]

21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் இடிந்ததில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மும்பையில் 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டடத்தில் கார் பார்க்கிங் லிஃப்ட் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. கார் லிஃப்ட் 7 மீட்டர் ஆழமான குழியில் விழுந்ததில் இரண்டு பேர் சிக்கியதாக பிரஹன் மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் சுபம் துரி (30) மற்றும் சன்ஜீத் யாதவ் (45) ஆகியோர் தீயணைப்பு […]