ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். 50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பைக்குகளை தயாரித்துவரும் ஹோண்டா மோட்டர்சைக்கில் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோண்டா கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான புதிய பதிப்பை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விற்பனை டாப் டீலர்களிடம் மட்டும் துவங்கியுள்ளது. சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் […]
Month: May 2025

இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையும் படிக்க: அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை […]

ஆபரேஷன் சிந்தூர் – பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!
ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலத்தை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இந்தப்பெண் விடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் பாலிவுட் நடிகர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மௌனமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த விடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பவே அதை நீக்கியும் இருக்கிறார். பின்னர், பலரும் இவரை கடுமையாக […]

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், 88 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று (மே 30) கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் இன்று (மே 31) அறிவித்துள்ளனர். இத்துடன், அப்பகுதியில் வசித்த 3,000-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து […]

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்
பாகிஸ்தானுக்கு தெரிவித்த இரங்கல் அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அந்நாட்டு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விளக்கமளிக்க கொலம்பியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன் அவர் பேசுகையில், அகிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மகாத்மா காந்தியின் […]
ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி
ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் […]

DMK: ‘புதிய பதவி… புதிய அணிகள்… புதிய துணை பொதுச்செயலாளர்…’ – திமுக பொதுக்குழு பரபர!
ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார். பொதுக்குழு அரங்கம் இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி […]

முதல்வர் வருகை; திரைச்சீலையால் மறைக்கப்பட்ட ’அசுத்த’ கால்வாய் – புதுப்பிக்கப்பட்ட சாலைகள்
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கப்படும் சாலைகள் நீண்ட காலத்துக்குப்பின் ஜூன் 1 ஆம் தேதி திமுகவின் மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெறுகிறது. அதற்காக உத்தங்குடி அருகே பிரமாண்ட பொதுக்குழு அரங்கம், விழாப்பந்தல், உணவுக்கூடம் என ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார். அமைச்சர் பி.மூர்த்தி. ஒருபக்கம் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகமும் கடந்த ஒரு வாரமாக களத்தில் இறங்கி வேலை […]

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?
தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய தி.மு.க, மீதமுள்ள ஒரு இடத்தை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது. அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அ.தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. […]

400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை அமைக்கிறது மின்வாரியம்!
சென்னை: பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது. தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல்வேறு பகுதிகளுக்கு மின்வாரியம் எடுத்துச் செல்கிறது. ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ. வங்கி உதவியுடன் பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Disclaimer :- […]

