தைலாபுரம்: “நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். அதாவது, யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் இருக்கிறேன்,” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இதை நான் சொல்லக்கூடாது. […]
Month: May 2025

‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
சென்னை: “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை […]

முதல்வரின் மதுரை வருகை! திரைச்சீலைகளால் மறைக்கப்பட்ட பந்தல்குடி கால்வாய்! கொதித்து எழுந்த மக்கள்! விளாசும் செல்லூர் ராஜூ
”பந்தல்குடி கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், குப்பைகளால் நிரம்பி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இப்பகுதி மக்கள், கால்வாயை தூர்வாரவும், இருபுறமும் உயரமான தடுப்புச் சுவர் அமைக்கவும் மூன்று தலைமுறைகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்” Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

நிலச்சரிவு: அருணாசலத்தில் 7 பேர் பலி
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஏழு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பனா–செப்பா சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர். பலியானவர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் […]

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் 34 பேரை பஞ்சாப் மாகாணத்தில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்தது. தெஹ்ரீக்-இ-தலிபான்-பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அவர்களில் 3 பேர் மோசமான பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் 415 ஆபரேஷன் […]

பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி
பாடகி தீயையும் தன்னையும் ஒப்பிடக்கூடாது என சின்மயி தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பாடகர்கள் பாடினர். அதில், பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக, சின்மயி அப்பாடலைப் பாடிய விதத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால், திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் […]

மிசோரமில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடுகள், ஹோட்டல்!
மிசோரமில் கனமழையின்போது வீடுகள், ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு பாறைகளும் சரிந்துள்ளன. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிலச்சரிவுகளில் ஐந்து வீடுகள் மற்றும் ஒரு ஹோட்டல் இடிந்து விழுந்தன. பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி இச்சம்பவங்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் ஹோட்டலில் தங்கியிருந்த மியான்மரைச் சேர்ந்த […]

Gaza: அச்சுறுத்தி நெருக்கும் இஸ்ரேல் ராணுவம்… வடக்கு காசாவின் கடைசி மருத்துவமனையும் மூடல்!
aவடக்கு காசா மாகாணத்தில் சுகாதார சேவைகள் வழங்கிவந்த கடைசி மருத்துவமனையான அல்-அவ்தா மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சேவைகளை நிறுத்தியுள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டாக்டர் முகமது சல்ஹா, “வியாழனன்று மாலையில், ஜபாலியாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வார முற்றுகைக்குப் பிறகும் இந்த கட்டாய வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்பது மிக வருத்தமாக இருக்கிறது. தற்போது, வடக்கு காசாவில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை. நாங்கள் மருத்துவமனையை […]

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்னாள் சிறப்புப் படையின் தலைமையகம் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்டூஸ் நகரத்தில் சிறப்புப் படைகள் பயன்படுத்திய ராணுவ தளங்கள் மற்றும் அல்-வுஹைப் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளின் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் நேற்று (மே 30) தாக்குதல் நடத்தியுள்ளன. […]

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அண்ணா அறிவாலயம் முகப்பு போன்று வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். […]
