Sorting by

×

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு 2 கேட்ச்சுகளை குஜராத் அணியினர் தவறவிட்டனர். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்காக, ஆட்ட நாயகன் விருதும் வென்றார். போட்டிக்குப் பிறகு […]

கேரள கப்பல் விபத்து: 22 தமிழக கடலோர கிராமங்கள் பாதிப்பு!

கேரள கப்பல் விபத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 22 கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரள கடல்பகுதியில் கடந்த மே 24 ஆம் தேதி, லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அம்மாநிலத்தின் கடல்பகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாள்களுக்கும் மேலாக, அந்தக் கப்பலில் இருந்த சரக்குப் பெட்டிகள் (கண்டெய்னர்), மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருகள் மற்றும் துகள்கள், கிளியூர் மற்றும் கல்குளம் ஆகிய கிராமங்களில் கரை […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. […]

“சின்ன சின்ன குழப்பங்களை சரிசெய்துவிடுவேன்!” – பாமக நிர்வாகிகளிடம் அன்புமணி உறுதி

சோழிங்கநல்லூர்: “பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம் வந்திருக்கிறது. அது நிச்சயமாக நடக்கும். அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், இரண்டாவது நாளாக பாமக மாவட்ட நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் தலைவர் […]

2023-ல் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததாக ஆய்வின் முடிவில் தெரிய வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை யில் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நியூடவுன் […]

“தமிழின் தொன்மை, பெருமையை மத்திய அரசு ஏற்காது” – சீமான்

மதுரை: தமிழின் தொன்மை, பெருமையை மத்திய அரசு ஏற்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்தார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை நம்பி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் கட்சி வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]

“வைகோவின் குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்” – மல்லை சத்யா

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் பணிகள் என்பது தமிழ் நல்லுலகத்துக்கு மிகப்பெரிய சான்று மற்றும் சாட்சியாக இருந்துள்ளது. பாமக, வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், பட்டியலின மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. தற்போது உட்கட்சி விவகாரத்தில் மருத்துவர்ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். இதற்கான விளக்கத்தை அன்புமணிதான் கூற வேண்டும். Disclaimer :- […]

10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!

சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது. சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த கிங்ஸ் கோப்பை அரசர்களின் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இறுதிப் போட்டியில் அல்-இத்திஹாத் உடன் அல்-காத்சியா மோதியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்-இத்திஹாத் வென்றது. இந்தப் போட்டியில் கரீம் பெஞ்சமா 34, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். ஹைஸீம் […]

இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! ராணுவத் தலைமை தளபதி ஒப்புதல்

பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டது. பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ஆயுதப்படைகளின் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் […]

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் யார்? ராமதாஸ் – அன்புமணி போட்டி!

பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருவர் நியமிக்கப்பட்டதால் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. பாமகவின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக கி. லோகநாதன், இன்று (மே 31) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு சோளிங்கர், அரக்கோணம் ஆகிய இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே சமயத்தில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வழக்குரைஞர் க. சரவணன் தொடர்வார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருவரின் […]