Sorting by

×

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் – அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என ஐஐடி கான்பூர், தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட் கடந்த மாதம் நடைபெற்ற ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்ற மாணவரொருவர், […]

‘காந்தி கண்ணாடி’ – ஹீரோவாக சின்னதிரை நடிகர் பாலா! விடியோவில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

சின்னதிரை நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புது விடியோ திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியிடப்பட்டது. ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஷெரீஃப் இயக்கத்தில் பாலா நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. படம்| காந்தி கண்ணாடி படக் குழு காந்தி கண்ணாடி படத்தின் முதல் க்ளிம்ஸ் விடியோவும் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. கையில் தீப்பந்தம் ஒன்றை ஏந்திக் கொண்டு பாலா நிற்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. படத்தின் […]

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆர் விவரம் வெளியானது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? என்பதை அறிவிக்கும் முதல் தகவல் அறிக்கை வெளியானது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த நிகிதா (41) தனது தாயுடன் வெள்ளிக்கிழமை மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்தாா். பின்னா், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித்குமாரிடம் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தும்படி நிகிதா கூறினாா். […]

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 30) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 593 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் […]

சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: […]

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு!

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அவர்களுக்கு இது பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. […]

ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக இன்று தெரிவித்தது. இந்தப் புதிய ஆர்டர்களுடன், நிதி ஆண்டு 2026ல் இன்று வரை நிறுவனத்தின் மொத்த ஆர்டர் ரூ.7,150 கோடியை எட்டியுள்ளதாக கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் தெரிவித்துள்ளது. நிறுவனம், அதன் சர்வதேச துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. கேபிஐஎல் மேலாண்மை இயக்குநர் & தலைமை நிர்வாக […]

கார் பந்தய படங்களில் மிகப்பெரிய வசூல் செய்த எஃப் – 1

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் உருவான எஃப் – 1 திரைப்படம் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. பிராட் பிட் படங்களில் முதல் வாரத்தில் செய்த அதிகபட்ச வசூல் செய்த படமாக எஃப் -1 மாறியுள்ளது. மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படங்களைத் தொடர்ந்து எஃப் – 1 திரைப்படத்தில் பிராட் பிட் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஜோசப் கொசின்ஸ்கி இயக்கிய […]

2-வது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; இங்கிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 290 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி நார்த்தாம்டனில் இன்று (ஜூன் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. சூர்யவன்ஷி அசத்தல்; 291 ரன்கள் இலக்கு முதலில் விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 290 ரன்கள் […]

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்க […]