தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பசமைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட அணு உலை வெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 2 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த அணு உலை வெடிப்பில் எத்தனை பேர் பலியாகினர் என்ற எந்த விவரங்களும் மாநில அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அணு உலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நிகழும்போது கிட்டத்தட்ட […]
Month: June 2025

வன்முறை மட்டும்தான்…!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி – 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கிடையே, […]

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!
ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி, எம்டி யி செங் 6 என்ற கப்பல் சென்றுகொண்டிருந்தது. மீட்புப் பணிகள் இந்த நிலையில், அந்த கப்பலின் என்ஜின் அறையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் […]

பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நடைமுறைக்கு வந்தது!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று(திங்கள்கிழமை) நடைமுறைக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு, பகல் 1 மணிக்கு, பிற்பகல் 3 மணிக்கு என 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் […]

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்
உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த காவலர் அஜய் குமார் (32), ஞாயிற்றுக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு வெளியே நடந்து சென்றார். அப்போது, சஹாரன்பூரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் உள்ளூர்வாசி மோஹித் ஆர்யாவைச் சந்தித்துள்ளார். முதலில் ஒரு கிரிக்கெட் போட்டி தொடர்பாகவும், பின்னர் வாட்ஸ்அப் அரட்டை தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு […]

கட்டாக்கில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள்!
ஒடிசாவின் கட்டாக்கில் சரக்கு ரயிலின் மூன்று காலிப் பெட்டிகள் திங்கள்கிழமை திடீரென தடம்புரண்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. காலை 8.30 மணியளவில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன. இதனால் யார்டில் உள்ள லூப் லைன் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே நிவாரண ரயில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. யார்டில் உள்ள லூப் லைன் விரைவில் சீரமைக்கப்படும். பிரதான பாதை (பத்ரக்-கட்டாக்கில்-விசாகப்பட்டினம்) தெளிவாகவும் செயல்பாட்டுடனும் உள்ளது. பிரதீப்பை நோக்கி […]

எனக்கும் தனுஷுக்கும் பிரச்னையா? வெற்றி மாறன் விளக்கம்!
சிம்புவுடான படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் விளக்கமளித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் – இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படம் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் கதையைத் தொட்டு எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையே, தனுஷை வைத்து வடசென்னை – 2 படத்தை எடுக்காமல் ஏன் வெற்றி மாறன் சிம்புவைத் தேடிச் சென்றார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது. இதனால், தனுஷுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் […]

செல்போன் சார்ஜிங் வசதி, சீட் பெல்ட்… சென்னை மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்!
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார். பேருந்தின் சிறப்பம்சங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. பயணம் அனைத்து 39 […]

கட்டாக்கில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து!
ஒடிசாவின் கட்டாக் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு யார்டில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று காலை சுமார் 8.30 மணியளவில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. யார்டில் உள்ள லூப் லைன் விரைவில் சீரமைக்கப்படும் என்று அவர் ‘ தெரிவித்தார். பிரதான ரயில் பாதையான (பத்ரக்-கட்டாக்கில்-விசாகப்பட்டினம்) தெளிவாகவும் செயல்பாட்டுடனும் உள்ளது. பிரதீப்பை நோக்கி ரயில் இயக்கமும் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். […]

சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர்!
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூன் 30) தொடக்கிவைத்தார். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு […]

