Sorting by

×

பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) குப்பை லாரியின் பின்புற லிப்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் சுமார் 25-30 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது. அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை. மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று இரவு, குப்பை சேகரிக்கும் லாரிக்குள் ஒரு சடலம் இருப்பதைக் கண்டோம். அதிகாலை […]

சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இருவர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சிசிடிவி காட்சிகள், மாணவி அளித்திருக்கும் புகாருக்கு மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அந்த சிசிடிவி காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர், மாணவி, காவலாளி என ஐந்து பேர் இருக்கும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். காவல்துறை திரட்டியிருக்கும் சிசிடிவி காட்சியில், சட்டக் கல்லூரியின் […]

“நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது..” – RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான “பொற்காலம்” இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். ‘தி எமர்ஜென்சி டைரீஸ் – இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று அஸ்ஸாமில் நடந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இந்த புத்தகம் அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவங்களின் தொகுப்பாகும். அப்போதைய பிரதமர் […]

மதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா பாஜக? – நாராயணன் திருப்பதி நேர்காணல்

மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு பெரும் வெற்றிபெற்றதாக இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற மாநாடுகள் இனி நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், தமிழக பாஜக துணை தலைவரும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆர்ஈசி லிமிட்டெட்டின் (ஊரக மின்வசதியாக்கக் கழகம்) இயக்குநருமான நாராயணன் திருப்பதி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக பேட்டி இது. ​பாஜக மற்​றும் இந்து அமைப்​பு​கள் எதிர்​பார்த்த அளவுக்கு மதுரை முருக […]

ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னை: ஜூலை 1-ல் மருத்​து​வர்​கள் தினத்​தில் கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு தமிழக அரசுக்கு அரசு மருத்​து​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மருத்​து​வக் கட்​டமைப்​பிலும், சுகா​தா​ரத் துறை செயல்​பாடு​களி​லும் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக உள்​ளது. ஆனால் அதற்​கான பங்​களிப்​பைத் தரும் அரசு மருத்​து​வர்​களுக்கு நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தரப்​படு​கிறது. தகு​திக்​கேற்ற ஊதி​யம் வேண்டி அரசு மருத்​து​வர்​கள் நீண்ட கால​மாகவே போராடி வரு​கிறோம். Disclaimer […]

மருதமலை முருகன் கோயிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்!

கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மருதமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து […]

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின. பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலாமாண்டு மாணவர்களுக்கு பூக்களை பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர். முன்னதாக, பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் கடந்த […]

திருப்புவனம் லாக்கப் மரணம்: “பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?” – சீமான்

கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருப்புவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் […]

அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய திமுக எம்​.பி. ஆ.ரா​சாவை கண்​டித்து சென்​னை​யில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரூ.1,76,000 கோடி ஊழல் வழக்​கில் சிக்கி திகார் ஜெயி​லில் இருந்த திமுக எம்பி ஆ.ரா​சா, அரசி​யல் நாகரீகம் அற்ற முறை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா குறித்து சமீபத்​தில் பேசி​யிருப்​பது மிக​வும் கண்​டிக்​கத்​தக்​கது. இப்​போதும் இவருக்கு எதி​ராக டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் […]

பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

சென்னை: பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க கையகப்​படுத்​தப்​பட​வுள்ள நிலங்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்​ண​யம் செய்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் பசுமை விமான நிலை​யம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக, பரந்​தூர் உள்​ளிட்ட சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களில் 5,746 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. விமான நிலை​யம் அமைக்க ஏகனாபுரம் உள்​ளிட்ட சில கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டம் நடத்தி வருகின்றனர். Disclaimer […]