Sorting by

×

கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சென்னை: கோ​யில்​களில் 5 ஆண்​டு​களுக்கு மேல் பணி​புரி​யும் தினக்​கூலி பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில செயற்​குழு கூட்​டம் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள குறுங்​காலீஸ்​வரர் கோயில் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாநில காப்​பாளர் வி.கண்​ணன் தலைமை தாங்​கி​னார். மாநில துணைத் தலை​வர் எஸ்​.தன​சேகர், மாநில இணை செய​லா​ளர் தாம்​பரம் இரா.ரமேஷ் உள்பட தமிழகம் முழு​வதும் இருந்து […]

பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

சென்னை: ​வி​ராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை​போல நாம் அனை​வரும் பெண் கல்​வி, ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்கு உதவ வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி கூறி​னார். விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை சார்​பில், பத்​மஸ்ரீ விருதுபெற்ற ஸ்த​பதி தேவ.​ரா​தா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரி​யார் நகரில் நேற்று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை நிறு​வனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.​வித்​யாதரன் தலைமை வகித்​தார். சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்​வி,ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணனை கவுர​வித்​தார். தொடர்ந்​து, அறக்​கட்​டளை […]

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி […]

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின்பகுதியளவு இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் விபத்து ஏற்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக […]

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமின்றி கிராம் ரூ.119க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Summary The price of gold in the city has decreased by Rs 120 per sovereign on monday(June 30, 2025)   Disclaimer […]

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி அல்லது மாணவர்கள் விரும்பும் மொழியை கற்றுக்கொள்ளலாம் என்று அரசாணையில் திருத்தம் செய்தது. ஆனாலும் இந்தியைத்தான் பிரதானமாக கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டு இருந்தது. மாநில அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து உத்தவ் தாக்கரே […]

செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு’ நடவடிக்கை ஏன்? – இது பலன் தருமா?

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக செயற்கை மழையை பொழியவைக்க டெல்லி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மழைக்காக ஜூலை 4 முதல் 11-ம் தேதிவரை மேக விதைப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “மேக விதைப்புக்கான வானிலை ஜூலை 3 வரை இல்லை என்பதால் ஜூலை 4-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கவிருக்கிறது. இதற்கான செயல்பாடுகளை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) கான்பூர், புனேவில் உள்ள இந்திய […]

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு […]

உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் கட்டுமான தளத்தில் இருந்த 20 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பலியானார்கள். மீட்புக் குழுக்கள் இதுவரை 11 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளது. மற்ற ஆறு பேர் இன்னும் காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை இடிபாடுகளில் இருந்து ஒரு உடலை […]

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?’ – கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “தொண்டர்கள் கூட்டணி குறித்துக் கவலைப்பட வேண்டாம். நாம் பலமான கூட்டணி அமைப்போம். கூட்டணியின் முதல்கட்டமாக நம்முடன் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறது. ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் […]