Sorting by

×

நீலகிரி: சுடுகாடு கேட்ட நபர், `வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் இல்லை’- அதிகாரிகள் குதர்க்கமான‌ பதில்!

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூரை அடுத்து தொட்டக்கொம்பை, பாரதிநகர், சேரனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் முறையான மயானம் கிடையாது என்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 300- க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் வருவாய்த்துறை மூலம் முறையான மயானம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் […]

“ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை…” – மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்கம் செய்து 7.48 கி.மீ தொலைவுக்கு சாலை போட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, சாலையின் நடுவிலிருக்கும் மரங்களை அகற்ற உரிய அனுமதி பெறுவதற்காக வனத்துறையை மாவட்ட நிர்வாகம் அணுகியது. Accident […]

பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை கடந்த மார்ச் 25-ம் தேதி மாலை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இந்த இல்லம் புராதண முறையில் பழமை மாறாமல் […]

‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

சென்னை: “அஜித்குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்போது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் வெளியிட்ட பதிவு: “காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்துக்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் […]

பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி, கடத்தப்பட்ட சிறுவன் மனுதாரரின் கட்டுப்பாட்டில் இருந்து […]

“தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

மதுரை: “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக விசிக வலிமை பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது” என மதுரை மேலளவு நிகழ்வில் தொல்.திருமாவளவன் எம்.பி பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் 28-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமையில் மாலை அணிவித்து […]

காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் பெண்கள் முறையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். […]

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவுக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில், ஜோர்டான், லெபனானுக்கு ஜூலை 1 முதலும், சிரியாவுக்கு மட்டும் ஜூலை 6ஆம் தேதி முதலும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த […]

நடிகர் ஜெய்யின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். […]

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்து வருகின்றனர். இந்தநிலையில், தோனி தமக்கே அந்த ‘கேப்டன் கூல்’ தலைப்பை அங்கீகரிக்கக் கோரி ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து, ட்ரேட் மார்க்ஸ் பதிவேட்டுத் தளத்தில், தோனி தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பம் ‘ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் அது குறித்த விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது […]