தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார். தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரிய தலைமையகத்தை திறந்துவைத்த அமித் ஷா, 2030-ஆம் ஆண்டுக்குள் மஞ்சள் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவதாக பேசினார். தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு […]
Month: June 2025

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தென்னாப்பிரிக்க வீரர்!
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூன் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. வரலாறு படைத்த கேசவ் மகாராஜ் […]

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ – ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!
கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் கொந்தளிப்பை […]

டி20 வடிவிலான போட்டி என்னுடைய பலம் கிடையாது: ஸ்மிருதி மந்தனா
டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தனா கூறியதென்ன? சர்வதேச டி20 போட்டியில் […]

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூா் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் […]

எஸ்பிஐ வங்கியில் புரொபஷனரி அலுவலர் வேலை: காலியிடங்கள் 541
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்) மொத்த காலியிடங்கள்: 541 சம்பளம்: மாதம் ரூ.48,480 – 85,920 தகுதி: 30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.4.2025 […]

சிம்பு – வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. நடிகர் சிம்புவும் ரௌடி தோற்றத்திற்கு மாறியுள்ளாராம். இது ரசிகர்களிடம் ஆவலை […]

திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக
சென்னை: “எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?.” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த […]

’ஜெய்பீம் பார்த்து ரிவீவ் செய்த முதலமைச்சர் எங்கே?’ எடப்பாடி பழனிசாமி கேள்வி!
”விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?” Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

படுதோல்வியைச் சந்தித்த கண்ணப்பா!
பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. சிவ பக்தரின் கதையாக உருவான படமென்பதால் இதன் வணிக நோக்கிறாக இந்தியளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் […]

