திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய் விட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின்படி, கோயில் காவலாளி அஜித்குமாரை (வயது 27) விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார். திருப்புவனம் லாக்கப் டெத் – […]
Month: June 2025

“திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது’’ – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
காகிதத்தில் இருந்து காரிடாருக்கும், நிஜமான தொழில் நிறுவனங்களுக்கும், வாக்குறுதிகளை விட்டு உண்மையான பலன்களை நோக்கி முன்னேற வேண்டிய நேரம் இது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு!
புதுதில்லி: இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையில் அளவிடப்படும் தொழிற்சாலை உற்பத்தி, மே 2024ல் 6.3 சதவிகிதம் அதிகரித்திருந்தது. உற்பத்தித் துறையில், உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தரவு சுட்டி காட்டுகிறது. இது கடந்த ஆண்டு 5.1 சதவிகிதமாக […]

பயிற்சியில் ஈடுபடாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுபடவில்லை. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? நாளை மறுநாள் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், குடும்பத்தில் […]

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!
திருவள்ளூரில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். மேலும், இதற்காக எத்தனை பேரிடம் அவர்கள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த […]

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?
மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்ட வெளியே வருவது கூட அபூர்வம் என்றும், அண்டை வீட்டினர் வற்புறுத்திய பிறகே குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவார் எனவும் அண்டை வீட்டினர் குறிப்பிடுகின்றனர். நவி மும்பையின் கார்குல் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய […]

“தண்டனையை விரைவாகப் பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு” – முதல்வர் ஸ்டாலின்
திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய்விட்டதாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின்படி, கோயில் காவலாளி அஜித்குமாரை (வயது 27) விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார். திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் […]

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!
மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா பொது வெளியில் பேசினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் […]

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 2 பெண்கள் உள்பட மொத்தம் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தால் புரி ரத யாத்திரையில் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதையடுத்து, இந்த அசம்பாவிதத்துக்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு, அம்மாநில முதல்வர் மோகன் […]

நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!
காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர், […]

