ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் 9 சி என்ற புதிய ஸ்மார்ட்போன், ஜூலை 12 – 14 தேதிகளில் வெளியாகும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளம்பரத்தை பிரபல இணைய விற்பனை தளமான அமேசானிலும் வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரும்பாலும் விற்பனைக்கான யுக்தியாக, அதன் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்துவது […]
Month: June 2025

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.85.73 ஆக முடிவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் குறைந்து 85.73 ஆக முடிவடைந்தது. இதற்கு பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தாக தெரிவிக்கப்பட்டது. உலகளாவிய உணர்வுகள் மேம்பட்டதால் இந்திய ரூபாய் மதிப்பு நேர்மறையாகத் தொடங்கி நிலையில் பிறகு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறை போக்கால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை இது வெகுவாக பாதித்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். வங்கிகளுக்கு இடையேயான அந்நிய […]

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 30) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 8.30 மணி வரை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்
இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. முன்னாள் ஆஸி. வீரர் கூறுவதென்ன? நாளை மறுநாள் முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், […]

PMK: “அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்…” – பாமக MLA அருள் சொல்வதென்ன?
பாமக கட்சியில் நடைபெற்றுவரும் தந்தை மகன் பூசலுக்கு மத்தியில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிய நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு மாநில அளவிலான இணைப் பொதுச்செயளாலர் பதவியை வழங்கினார் ராமதாஸ். அன்றைய தினமே அருள் வகித்துவந்த மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை அமர்த்தினார். “ஐயா (ராமதாஸ்) மட்டுமே பதவி கொடுக்கவும், பறிக்கவும் முடியும்” என அருள் பேசிவரும் சூழலில், தானே கட்சியின் தலைவர் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் […]

“ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு
திருச்சி: “ஏ.ஆர்.ரஹ்மானுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கூறினார். திருச்சியில் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் ஸ்டாலின் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை […]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்
முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 8ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைகளுக்குச் செல்லவுள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவுள்ளன. இதன் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. சிறப்பம்சங்கள் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் யூனிசோக் T8200 புராசஸர் உடையது. நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் உடையது. பின்புறம் இரண்டு 50MP கேமரா கொண்டது. 5000mAh […]

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!
ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும் ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் […]

4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: தொடர்ந்து நான்கு நாள் ஏற்றத்திற்குப் பிறகு, முக்கியமாக வங்கிப் பங்குகளில் லாபம் ஈட்டுதல் அதிகரிப்பால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 576.77 புள்ளிகள் சரிந்து 83,482.13 ஆக இருந்தது. வர்த்தகம் தொடர தொடர, நாள் முழுவதும் சரிந்த நிலையில் இருந்த பிஎஸ்இ குறியீடுகளான சென்செக்ஸ் 452.44 புள்ளிகள் சரிந்து 83,606.46 ஆகவும் நிஃப்டி 120.75 புள்ளிகள் சரிந்து 25,517.05 ஆக […]

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!
மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் மணிப்பூரில் சௌராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் குக்கி சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் இருவர் குக்கி சமூகக் குழுவில் உள்ள […]

