Sorting by

×

டிரெண்டிங் ஆகும் அஜித்குமார் மரணம்.. நீதி கேட்டு எக்ஸ் தளத்தில் குவியும் பதிவுகள்!

கோயில் தற்காலிகப் பணியாளர் அஜித்குமாரை, விசாரணைக்கு அழைத்துச் சென்று, அடித்து கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் AG&P பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 222 பகிர்மாண நிலையங்கள் மற்றும் […]

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருகின்றன. இதன் மூலம், மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை கரோனா தொற்று எண்ணிக்கை 2,501ஐ எட்டியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புணேவில் 5, மும்பையில் 2, ராய்காட், பிம்ப்ரி-சின்ச்வாட், கோலாப்பூர், சத்ரபதி சம்பாஜி நகரில் தலா ஒருவருக்கு கரோனா பதிவாகியுள்ளது. […]

ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பு! ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 9.4 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், 2021-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி […]

2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. முதுகுப் பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய […]

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட அமீர் கான்! ஏன்?

நடிகர் அமீர் கான் சித்தாரே சமீன் பர் படத்திற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான சித்தாரே சமீன் பர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் கலக்கி வருகிறது. அறிவுசார் சவால்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான், அவர்களால் எப்படியெல்லாம் சோதிக்கப்படுகிறார் என்கிற கதையில், மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களைச் சமூகம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சித்தாரே திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. […]

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் இன்று பதவியேற்றார். அகில இந்திய பாஜக தலைவர் அடுத்த மாதம் (ஜூலை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or […]

அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான […]

காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு கட்ட தாக்குதல்களில் காஸா நகரில் 47 பேரும், வடக்கு காஸாவில் பலரும் கொல்லப்பட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். காஸாவில் போர் தொடங்கியதுமுதல் இதுவரை கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 56,500-ஐ கடந்துள்ளது; சுமார் 1,33,419 பேர் […]

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ் நாட்டின் டாப் 5 தொடர்கள் என்னென்ன?

சின்ன திரையில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள் குறித்து காணலாம். சிறகடிக்க ஆசை சின்ன திரையில் பல்வேறு மாற்றங்கள் இந்த வாரத்தில் நிகழ்ந்துள்ளன. சன் தொலைக்காட்சி தொடர்களை பின்னுக்குத்தள்ளி, விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது. வெற்றி வசந்த் – கோமதி பிரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் இந்தத் தொடர், நடுத்தர குடும்பத்து பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு […]