Sorting by

×

3 பிஎச்கே டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன்: சரத் குமார்

3 பிஎச்கே திரைப்படத்திற்கான டப்பிங்கின்போதே அழுதுவிட்டதாக நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க சரத் குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த 3 பிஎச்கே திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் நடுத்தர வர்க்கக் குடும்பம் சொந்த வீடு கட்ட எவ்வளவும் சிரமங்களையும் அவமதிப்பையும் சந்திக்கின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சில நாள்களுக்கு முன் வெளியான டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல […]

காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் பக்தா் ஒருவா் காரில் வந்துள்ளார். இவா் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 2 ஆயிரத்தை காரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா். இதன்பிறகு, திரும்பி வந்து பாா்த்தபோது, காரில் இருந்த நகைகள், பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அந்தப் பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் […]

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து: 12 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் […]

கடலூர்: `அலட்சிய சிகிச்சை… முறையிட்டால் மிரட்டல்!’ – அரசு மருத்துவரிடம் விசாரணை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு காயங்களுடன் சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனை பரிசோதித்து, மருத்துவர் வழங்கிய ஊசி சிறுவனுக்கு மேலும் வலியினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை கேட்டபோது, அவரை சரமாரியாக மருத்துவர் திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. […]

ADMK : ‘கூட்டணி ஆட்சி; கறாராக ‘நோ’ சொல்லும் எடப்பாடி! – பின்வாங்குமா பா.ஜ.க?

‘கூட்டணி ஆட்சி சர்ச்சை!’ அதிமுக – பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி திரியைக் கொளுத்திப் போட்டார் அமித் ஷா. அப்போது உண்டான புகைச்சல் இன்னுமே ஓயவில்லை. எடப்பாடி பழனிசாமி ‘எடப்பாடியின் மெசேஜ்!’ நேற்று, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது உள்ளக் கிடக்கை மொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்களை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிக […]

ஜூலை 8-ல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா இன்று(ஜூன் 30) கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. சிகர நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய நாள்(ஜூலை 8) திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அன்றைய நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், […]

எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!

சின்ன திரை இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய எதிர்நீச்சல் முதல் பாகத்திலும், கோலங்கள் தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் திருச்செல்வம் நடித்திருந்தார். இந்த இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் -2 தொடரிலும் ஜீவானந்தம் என்ற பாத்திரத்தில் திருச்செல்வம் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் […]

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. […]

தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகாச்சி கெமிக்கல்ஸ் எனும் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் சுற்றியிருந்த பகுதிகள் முழுவதும் நெருப்பு சூழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர மீட்புக் குழுக்கள் தொழிற்சாலைக்கு விரைந்துள்ளனர். BREAKING #Telangana Factory Blast 5 Dead, 15 Injured in Sangareddy Massive explosion at Sigachi Industries in Pashamylaram Industrial Estate […]

சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 30) போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் […]