Sorting by

×

இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

செய்​யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்​டிடத்​துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கட்​டு​மான பணி​கள் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ள​தால், விரை​வாக பணி​களை தொடங்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சுற்​றுப்​புற கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், செய்​யூர் வட்​டத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் மற்​றும் பல்​வேறு வணிக நிறு​வனங்​கள், சிப்​காட் உள்​ளிட்​டவை அமைந்​துள்​ளன. இதனால், மேற்​கண்ட வட்​டத்தை சேர்ந்த பொது​மக்​கள் பல்​வேறு தேவை​களுக்​காக செங்கல்பட்டு, தாம்​பரம், மது​ராந்​தகம், கல்​பாக்​கம் ஆகிய பகு​தி​களை சார்ந்​துள்​ளனர். […]

இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்

காஞ்​சிபுரம் அரசு தலைமை மருத்​து​வ​மனை​யில் இதய சிகிச்சை பிரிவுக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் பொது​மக்​கள் அவதி​யுற்று வரு​கின்​றனர். மாரடைப்பு உள்​ளிட்ட நோய்களுக்கு வருபவர்​களுக்கு இதய பிரிவு சிகிச்​சைக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் மற்ற மருத்​து​வர்​கள் சிகிச்சை அளிக்​கும் நிலை இருப்​ப​தாக பொது​மக்​கள் குற்​றம் சாட்டுகின்றனர். காஞ்​சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​மனைக்கு 200-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து நாளொன்​றுக்கு சுமார் 1000-க்​கும் மேற்​பட்ட நோயாளி​கள் சிகிச்​சைக்கு வருகின்றனர். இந்த மருத்​து​வ​மனை​யில் டயாலிஸிஸ், கண், காது மற்​றும் மூக்கு தொண்​டை, குழந்​தைகள் […]

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

அரசு சார்​பில் வழங்​கப்​பட்ட இலவச பட்டா ஆவணங்​கள் தொடர்​பான கோப்பு தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மாய​மானதால் கணினி​யில் பதிவேற்​று​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. மாவட்ட நிர்​வாகம் இதற்கு தீர்வு காண வேண்​டும் என, பொது​மக்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர் தாம்​பரம் அருகே மாடம்​பாக்​கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்​ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்​தில் குடி​யிருந்த, 34 நபர்​களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா […]

திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு இடையே பாதியளவுக்கு கூடுதலாக மண்ணில் ஒரு சிற்பம் புதைந்திருந்தது. இதனை துர்க்கை அம்மன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக, அதே கிராமத்தில் வசிக்கும் முரளி என்பவர் அளித்த […]

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக […]

சட்டம் – ஒழுங்கு: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

சட்டம் – ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூன் 30) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், காவல் துறை இயக்குநர் (நிருவாகம்) ஜி. வெங்கட்ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை மாநகர […]

போபாலின் 90 டிகிரி மேம்பாலம்! கடும் விமர்சனத்தால் நடந்த சம்பவம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறப்பு விழா காணாத 90 டிகிரி மேம்பாலம் என புகழ்பெற்ற ரயில்வே மேம்பாலத்துக்கு வந்த கடுமையான விமர்சனத்தால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டுமானப் பணியை ஒப்பந்த முறையில் மேற்கொண்டிருந்த இரண்டு நிறுவனங்கள், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. போபாலில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே, 90 டிகிரி கோணத்தில் திருப்பம் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் […]

கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த விளக்கத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை, கட்சி மேலிடம் கர்நாடகத்துக்கு அனுப்பியுள்ளது. பெங்களூரில் மூன்று நாள்கள் முகாமிடும் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். […]

உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் கில்லெஸ்பி மற்றும் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அஸார் மஹ்முத் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடையும் முன்பே, கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரும் அவர்களது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர். […]