Sorting by

×

சாலை ஓரத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சென்னையின் முன்னாள் மேயர் சிலை! – கவனிக்குமா மாநகராட்சி?

நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்டவர் சென்னையின் முன்னாள் மேயர் என்.சிவராஜ். தமிழக முதல்வராக‌ ஜெ.ஜெயலலிதா இருந்த போது சென்னை தங்க சாலை மணிக்கூண்டு பகுதியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் மேம்பாலப் பணிகள் நடக்கவிருப்பதாகவும் தற்காலிகமாக எனச் சொல்லியும் சிலை இடம் […]

டூரிஸ்ட் ஃபேமிலி மொத்த வசூல் இவ்வளவா?

நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் ஒட்டுமொத்தமாக […]

ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில். இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் […]

பாமக: ‘பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு…’ – அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் பேசியது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருள் இன்று (ஜூன் 30) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ராமதாஸ், அன்புமணி அதிகாரம் அவருக்குதான் இருக்கிறது ” பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஐயா அவர்கள்தான் 45 […]

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மவுனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சொத்து வரியைக் குறைத்து முறைகேடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், […]

விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவுக்காக 2 கோடியே […]

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதாட்டி மனு

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி தங்கமணி மனு அளித்தார். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற மூதாட்டி. இவர், தன்னிடமுள்ள பழைய ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பழைய நோட்டுகளுடன் வந்து மனு அளித்தார். இந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு முறை மனு அளித்திருக்கிறார். […]

மதத் திட்டங்களை ஊழலுக்காக சுரண்டுகிறது பாஜக: அகிலேஷ்

மத மேம்பாட்டுத் திட்டங்களை ஊழல் மற்றும் சுரண்டலுக்கான வழிகளாக மாற்றுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.   Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

மறந்துடாதீங்க… நாளைமுதல் ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்!

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை நாளைமுதல் (ஜூலை 1) அமலுக்கு வருகின்றது. இந்த நிலையில், ஐஆர்சிடி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனர்கள், உடனடியாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகள் தடுக்கும் நோக்கில், விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என […]

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் அந்த ஆணின் சகோதரரான மைனா் சிறுவனை கடத்திய விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் காவல்துறை டிஜிபி ஜெயராமுக்கு தொடா்புள்ளதாக சந்தேகம் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட இளைஞரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி […]