மக்களின் விருப்பப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் செய்தியாளா்களுடன் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் திருப்புவனம் பகுதியில் பொதுமக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் இந்த பகுதி வைகை ஆற்றில் மிதந்து வந்தது திட்டத்தின் முகத்தை பிரதிபலிக்கிறது. வாக்குகளுக்காக ஏனோ தானோ என இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக […]
Month: August 2025

‘சாமி இல்லை என்று சொல்லி தமிழ் மண்ணை கலங்கப்படுத்தாதீர்கள்’ – இயக்குநர் பேரரசு பேச்சு
புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு பேசினார். குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் […]

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது…” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சேதேஷ்வர் புஜாராவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 31) அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி புஜாராவுக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “நீங்கள் ஓய்வு முடிவை அறிவித்த்தும், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தரப்பிலிருந்து கிரிக்கெட்டில் நீங்கள் நிகழ்த்திக்காட்டியுள்ள உங்கலளுடைய குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக பாராட்டு பொழிந்த வண்ணம் இருந்தது. பெரும் கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள உங்களை மனதார […]

ஹாக்கி: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா 3 – 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கடைசிவரை கோல் அடிக்க போராடிய ஜப்பான் அணி தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் 4’, 5’ அடுத்தடுத்த இரு நிமிஷங்களில் கோல் அடித்து அசத்திய இந்திய அணி வீரர்கள் ஜப்பானை போராடச் செய்தனர். பின்னர் சுதாரித்து ஆடிய ஜப்பான், 38’-ஆவது நிமிஷத்தில் […]

கத்தாரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வா் உத்தரவு
சென்னை: கத்தாரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நவாஸின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சோ்ந்த நவாஸ்(35) கடந்த 10 ஆண்டுகளாக கத்தாா் நாட்டில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஆக.25-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் நவாஸ் உயிரிழந்தாா் என்ற செய்தியைக் கேட்டு […]

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு – புகைப்படங்கள்
பிரதமர் நரேந்திர மோடி உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான். ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடான சந்திப்பின் போது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் பிரதமர் நரேந்திர மோடி. நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உடன் பிரதமர் நரேந்திர மோடி. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் உடன் பிரதமர் நரேந்திர மோடி. தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி […]

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்
சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 முதல் இதுவரை ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களுக்கு திமுக அரசால் ஏற்படுத்திய இடையூறுகள் மற்றும் பிரசனைகள் ஏராளம். அதனால், அந்த தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை. 4 முறை வெளிநாடுகளுக்கு […]

சசிகாந்த் செந்தில்: “மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது” – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை […]

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!
கொல்கத்தா: அமெரிக்கா விதித்த வரிகள் தொழில்துறையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகித அமெரிக்க வரிகள் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநர் சப்யசாச்சி ரே, ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்கு முன்கூட்டியே ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி நடவடிக்கையை எதிர்பார்த்து […]

சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் இந்து அமைப்புகள் சாா்பில் 1,519 விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள் இன்று (ஆக. 31) ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை கரைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று (ஆக. […]

