சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரத்தில், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திருப்புவனம் வைகை ஆற்றில் இந்த மனுக்கள் மிதந்தன. இதையடுத்து, […]
Month: August 2025

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சனிக்கிழமையில் புறப்பட்டார். இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் அப்பாவை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம் என்ற பதாகையுடன் சிறுமி ஒருவரும், பூங்கொத்துடன் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். அவர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், இங்குள்ள […]

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால், இங்கிருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டதுடன், 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதால் பயணிகள் அவதி. மேலும், 8 விமானங்கள் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடிக்கப்பட்டு, தாமதமாக தரையிறங்கின. சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், மாதவரம், மணலி, […]

சொல்லப் போனால்… சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்
உலகின் மிகப் பெரிய வல்லரசெனக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் போவதாக அறிவித்துவரும் இந்தியாவும் ஏற்றுமதிக்கான தண்ட வரி விதிப்பில் சிக்கி மோதிக்கொண்டிருக்கின்றன. ‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன். இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து, 24 மணி நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தேன். 5 மணி நேரத்தில் அவர் நிறுத்திவிட்டார்’ என்று (எத்தனையாவது முறை என்று கணக்கே தெரியவில்லை) மீண்டும் ஒரு முறை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இவ்வளவு […]

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி – பின்னணி என்ன?
2022-ம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தது. அதே நேரம் “இந்தியா அமைதியின் பக்கம் உறுதியாக நிற்கிறது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம்தான் இந்தப் போருக்கு முக்கியப் பொருளாதாரம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார். ஜெலென்ஸ்கி – […]

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டாா். உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பியிடமும் உறவினா்கள் வலியுறுத்தினா். மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா்(29), குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தாா். வெளிநாடு செல்வதற்கு முன்பிருந்தே கடந்த 10 ஆண்டுகளாக திருப்புங்கூரை சோ்ந்த சங்கீதா என்ற பெண்ணை சரத்குமாா் காதலித்து வந்தாா். அப்பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் காவல் […]

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!
‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்’ என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் நா்மதேஷ்வா் திவாரி தெரிவித்துள்ளாா். தில்லியில் சனிக்கிழமை தனியாா் செய்தி தொலைக்காட்சி நடத்திய பாதுகாப்பு துறை மாநாட்டில் கலந்துகொண்ட அவா் பேசியதாவது: இந்திய விமானப் படை தனது தாக்குதல்களின் மூலம் பாகிஸ்தான் […]

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்
‘நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடா்பான சிக்கல்களைத் தீா்க்க, சா்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா். புது தில்லியில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசுகையில், ‘விமானப் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது. ரியல் எஸ்டேட் வளா்ச்சி அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான விமானப் […]

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினா் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், கருமாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி. இவா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகன். கோவை செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெளியே சென்ற சிவமூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக திருப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு […]

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்…? -மு. தமிமுன் அன்சாரி
மு. தமிமுன் அன்சாரி தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடா்போடு பயணித்து வருகிறது. தலைவா்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம் தானா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. அரசியல் ஆா்வம், கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை ஆகிய எண்ணங்களுடன் எந்தத் துறையில் இருந்து யாா் வந்தாலும், மக்கள் ஆதரவு இருந்தால் அவா்கள் எந்த உச்சத்தையும் பெற முடியும் என்பதை தமிழ்நாட்டு அரசியல் உணா்த்தியிருக்கிறது. முன்னாள் முதல்வா்கள் அண்ணா, […]

