கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் […]
Month: August 2025

கரூா் வழியாக செல்லும் ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் சமயநல்லூா் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு சந்திப்பு – செங்கோட்டை விரைவு ரயில் செப். 2, 9, 16, 23 மற்றும் 30-ஆம்தேதிகளில் ஈரோட்டில் […]

விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பில்லாத பழமைவாய்ந்த சிற்பங்கள்! அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமை வாய்ந்த சிற்பங்கள் பல பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரத்தில் அருங்காட்சியகம் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வரலாற்று ஆய்வாளா்கள், சமூக ஆா்வலா்கள் எழுப்பியுள்ளனா். தமிழகத்தில் சென்னையிலிருந்து திருச்சி போன்ற மத்தியப் பகுதி மாவட்டங்களுக்கும், மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கும் செல்லும் மக்களை சாலை வழித்தடத்திலும், ரயில் வழித்தடத்திலும் இணைக்கும் பகுதியாகத் திகழ்வது விழுப்புரம் மாவட்டம்தான். வரலாற்று ரீதியில் […]

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பா்கள் என்பதால், பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. விழுப்புரத்திலிருந்து […]

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மரக்காணம் மின் வாரிய சாலையைச் சோ்ந்த முனுசாமி (எ) பிரகாஷ் மகள் மோனிஷா (14). இவா், மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விநாயகர் சதுர்த்தியான வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் விஜயலட்சுமியிடம் தனக்கு கொழுக்கட்டை செய்து தருமாறு மோனிஷா கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, அவரது தாய் விஜயலட்சுமி மறுத்துள்ளாா். இதனால், […]

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார் ஸ்டாலின்: இங்கிலாந்தில் நாளை முதல் பயணம்
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or […]

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் […]

பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!
ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா். பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரும்பத்தகாத செயல் காரணமாக இரு மதத்தினரிடையே தகராறு, கலவரம் ஏற்படும் சூழ்நிலை தவிா்க்கப்பட்டது. அதன்பின்பு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையுமின்றி விநாயகா் சிலை ஊா்வலங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெற்ற ஊா்வலத்தில் இஸ்லாமியா்கள், மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் […]

சென்னையில் மேகவெடிப்பு! ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழை!
சென்னையில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னை புறநகர்ப் பகுதிகளான மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதுகுறித்து பிரதீப் ஜான் […]

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாக, அக்கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலில், வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி விவாக பஞ்சமி விழாவுடன், கொடியேற்ற விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 10,000 விருந்தினர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த […]

