Sorting by

×

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய பாடல் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி […]

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை […]

ஜெயிலர் – 2 படத்தில் வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் ஜெயிலர் – 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் – 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன் […]

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

பாட்னாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் செப்டம்பர் 1ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. அக்கட்சியின் சார்பில் மக்களவை எம்.பி. யூசுப் பதானும், உ.பி.தலைவர் லிலிதேஷ் திரிபாதியும் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ஏற்கெனவே, இந்த பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது திரிணமூல் காங்கிரஸும் இணைகிறது. திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு […]

“தமிழரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்த சக்திகள்” – மூப்பனார் நினைவு நாள் விழாவில் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: “தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் […]

EPS-க்காக, Annamalai சபதம், DMDK-உடன் கே.என் நேரு டீல்! | Elangovan Explains

ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல். கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர கே.என் நேருவிடமும் இரண்டு அசைன்மெண்டுகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அதற்கேற்ப தேமுதிகவுடன் பேசி வருகிறார் கே.என் நேரு. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து காங்கிரஸில் உருவாகி இருக்கும் புரட்சி படை. இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் திமுக. […]

ஒரே வீட்டில் 947 Voters – Thanos -க்கு Voter ID? – RTI கேள்விக்கு பதிலளிக்காத ECI | Imperfect Show

* இந்தியாவில் ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு? * உலக பொருளாதாரம் உறுதி தன்மைக்கு சீனா- இந்தியா இணைந்து பணியாற்றுவது அவசியம்? – மோடி * மோடியால் ஜப்பானில் பாதுகாப்பாக இருக்கிறோம் – கருத்து சொன்ன பெண் * அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! * GDP Growth Rate 7.8% * GST சீர் திருத்தம்: மாநிலங்களுக்கு ஏற்படப்பபோகும் வருவாய் இழப்பு? * மத்திய மாநில அரசு […]

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்குக: பிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் மிக முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளில் ஒன்று திருப்பூர் பின்னலாடை மையம் என்பது உங்களுக்குத் தெரியும். இது தமிழகத்தின் மக்கள் மட்டுமல்ல, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் குறிப்பிடத்தக்க தொழிலாளர்களையும் உள்ளடக்கிய 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. Disclaimer […]

“அமெரிக்க வரி நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன்

திருப்பூர்: “நெருக்கடியில் உள்ள நமது ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க […]