Sorting by

×

“திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள்” – அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு பழனிசாமி அறிவுரை

சென்னை: திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் என்று அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். அதிமுக மாணவரணி சார்பில் ‘உரிமைக்குரல்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்கள் 217 பேருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. Disclaimer :- This story […]

அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன?

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக […]

‘திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு நிவாரணம்’ பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை!

‘இது தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கணிசமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளுடன் மற்ற சாத்தியமான நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுகொள்கின்றேன்’ ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அறிவழகன் இறுதியாக சப்தம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான உருவாக்கமாக இருந்தாலும் படத்திற்குக் கிடைத்த கலவையான விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேநேரம், நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் அதிதி ஷங்கருக்கு மாவீரன் திரைப்படத்துக்குப் பின் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. இறுதியாக நடித்த நேசிப்பாயா திரைப்படமும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில், அதிதி ஷங்கர் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் முழுக்க பெண் […]

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

யேமனில், ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசின் பிரதமர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமன் நாட்டில், ஈரானின் ஆதரவைப்பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைமையிலான அரசு, தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த ஆக.28 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஹவுதி அரசின் பிரதமர் அஹமது அல்-ரஹாவி மற்றும் அவரது அமைச்சரவைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக, ஹவுதிகள் இன்று (ஆக.30) தெரிவித்துள்ளனர். […]

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்குள்ள ராகுல் காந்தியின் புகைப்படங்களில் கருப்பு வண்ணப்பூச்சு பூசியதோடு பதாகைகள் மற்றும் கொடிகளை சிலர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. அதோடு அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மூத்த போலீஸ் […]

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 7 ஆண்டுகள் கழித்து அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில், அவர் ரஷியாவுடனான போர் குறித்து, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் செல்போனில் உரையாடியுள்ளார். இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ”இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் ஸெலன்ஸ்கிக்கு நன்றி. நடைபெற்று வரும் மோதல், […]

Seeman: “100 மரம் நட்டால் சான்றிதழ்; 1000 மரம் நட்டால் அரசு மரியாதை!” -சீமானின் 10 அம்ச திட்டங்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் திருத்தணியில் மரங்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என சில சுவாரஸ்யமான திட்டங்களை பகிர்ந்திருந்தார். Seeman “பத்தாண்டு பசுமைத் திட்டம், பல கோடி பனைத் திட்டம்,” என சீமான் பேசியவை: ‘குழந்தை பிறந்தவுடனேயே ஒரு மரம் நட வேண்டும். குழந்தைக்கு வைக்கும் பெயரையே மரத்துக்கும் வைத்து வளர்க்க வேண்டும். குழந்தை வளர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளை கொண்டாடுகையிலும் ஒரு […]

“நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல” – மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “மாநாடு நடத்த இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு, அவர்களுக்கு என்ன மறை கழன்றுவிட்டதா என்று சிலர் கேட்பார்கள். மறை கழன்றதால் அல்ல; மறையைக் கற்றதால் இந்த மாநாடு நடத்துகிறோம்.” […]

நீலகிரி ரிசார்ட்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா? – அறிக்கை கோரியது ஐகோர்ட்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாவட்ட ஆட்சியர், வன அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டம், மசினகுடி உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக […]