இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டபோது, மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்ததாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புகார் அளித்தது. இதுகுறித்த விசாரணையில், டேராடூன் விமான நிலையத்தில் மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ராகுல் பணத்தை மாற்றியதாகக் கூறி, […]
Month: August 2025

“நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்” – ராஜ்நாத் சிங்
என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன்களே உள்ளன. உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி […]

Judiciary: “நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்” – இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?
நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார். பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 27, 2025 அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அதனை ஏற்று, ஆகஸ்ட் 29, 2025 அன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஆனால், இவருக்கு முன்பு பதவி வழங்கப்பட வேண்டிய மூத்த பெண் நீதிபதிகள் இருந்தபோதும் ஏன் […]

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!
பாதுகாப்புப் படையினரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம், குரெஸ் செக்டரில் ஊடுருவியதாக இரு பயங்கரவாதிகள் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த பாகு கான் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாகு கான், 1995 ஆம் ஆண்டுமுதல் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் […]

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி வரையிலான 74 கி.மீ. தொலைவிலான நான்குவழிச்சாலையை உளுந்தூா்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்த சாலைக்கான புதிய கட்டணம் ஆண்டுதோறும் செப்டம்பா் 1 முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கட்டண உயா்வு குறித்த விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. காா், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு […]

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!
பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப் மாகாணத்தில், கடந்த ஒருவாரமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1,700 கிராமங்கள் வெள்ள நீருக்குள் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இன்று (ஆக.30) காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வரும் சூழலில், அங்குள்ள நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளத்தின் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. […]

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்
உதய்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தீப்தி கிரண் மகேஸ்வரி. இவரும், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சனிக்கிழமை உதய்பூர்-ராஜ்சமந்த் நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். உதய்பூரில் உள்ள அம்பேரி அருகே அதிகாலை 1 மணியளவில், மகேஸ்வரியின் கார் மீது குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் மகேஸ்வரியின் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது […]

ஆசிய கோப்பையை புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வருகை!
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் நாட்டின் போர் பதற்றத்தினால் இரு நாடும் விளையாட்டு போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வருகின்றன. இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை. அதேவேளையில், வெளிநாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்திற்கு பாகிஸ்தான் வருமென ஹாக்கி இந்தியாவின் செயலாளர் போலாநாத் சிங் […]

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்
படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் சமுத்திரகனி. மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் யோலோ. புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள […]

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? – முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆட்சி […]

