Sorting by

×

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இந்தியளவில் […]

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (54) கொல்லப்பட்டார். தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைன் நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy) சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆண்ட்ரியின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, அவர் மீது தாக்குதல் நடத்தியவர் […]

டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!

தில்லி பிரீமியர் லீக்கில் திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் மோதலில் ஈடுபடுவதைக் குறைக்க இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அடங்காத திக்வேஷ் ரதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிதீஷ் ராணா திக்வேஷ் ரதி ஐபிஎல் கிரிக்கெட்டின்போது தனது பந்து வீச்சினாலும் நோட்புக் செலிபிரேஷன் மூலமும் பிரபலமானார். அதுமட்டுமின்றி அவர் விளையாடிய போட்டிகளில் எல்லாமே அபராதம் வாங்கியும் கவனம் ஈர்த்தார். இந்நிலையில், தில்லி பிரீமியர் லீக்கிலும் அவர் […]

ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மணிமகேஷ் யாத்திரை சென்ற 10 பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் புனித யாத்திரையை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், மோசமான வானிலை, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளினால் அந்த மலையேறும் யாத்திரை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளார் டிசி ராணா, மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டவர்களில் குறைந்தது 10 பக்தர்கள் பலியானதாகவும், […]

பைசன் காளமாடன் முதல் பாடல் அப்டேட்!

நடிகர் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் செப். 1-ல் வெளியாகவுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் காளமாடன் படத்தை இயக்குகிறார். தீபாவளி திருநாளில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடல், வருகிற திங்கள்கிழமையில் (செப். 1) வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ள பைசன் படமானது, […]

சீனாவில் பிரதமர் மோடி

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சனிக்கிழமை சீனா சென்றடைந்தார். தியான்ஜின் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, பிரதமா் மோடி நாளையும், நாளை மறுநாள் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளாா். முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? – முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி இந்த […]

சத்தீஸ்கரில் ஆசிரியரைக் கடத்தி கொன்ற நக்சல்கள்!

சத்தீஸ்கரில், அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நக்சல்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில், டோட்கா கிராமத்தைச் சேர்ந்த கல்லு டட்டி (வயது 25) எனும் இளைஞர், லெந்திரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.29) மாலை, பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்றபோது அவரை நக்சல்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட கல்லு டட்டியை, நக்சல்கள் கூர்மையான ஆயுதங்களினால் தாக்கி […]

அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது, காதி என்கிற […]

அமெரிக்க வரி நெருக்கடி மீதான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்தியா தனது ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. Disclaimer :- This […]

விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Disclaimer […]