Sorting by

×

என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடரின் சில காட்சிகளும் அதற்கேற்றவாறே உண்மையாகவும் நடந்தேறின. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 29 ஆம் தேதியில் மாரடைப்பால் இறந்து விடுவார் என்று சிம்ப்ஸன்ஸ் தொடர் பொம்மைகளைப் போன்று ஏஐ மூலம் சித்திரித்த படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி […]

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் நடிகை ரச்சிதா ராம் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கைதி – 2 படத்தை இயக்குகிறார். இதற்கிடையே, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் […]

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

மராத்தா போராட்டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனைத்து போலீஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் விடுமுறையில் உள்ள போலீஸார் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார். மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையின் ஆசாத் மைதானத்தில் நேற்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். உரிய இடஒதுக்கீட்டை […]

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

வெப்பம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 19 போட்டிகளில் 18-இல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக யுஎஇ, இசிபி அறிவித்துள்ளது. ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. அபுதாபி, துபையில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன. அங்கு அதிகமான வெப்பம் காரணமாக வீரர்களுக்கு நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுமென போட்டியை அரைமணி நேரம் தள்ளி வைக்கிறார்கள். வழக்கமாக அங்கு 6 மணிக்கு நடைபெற இருந்த போட்டிகள் […]

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

உத்தரப் பிரதேசத்தில் மது அருந்திய 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லிகாய் தத் நகர் கிராமத்தில் மது அருந்திய மூன்று பேர்களில் இருவர் பலியாகினர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஹரியாணாவிலிருந்து தாஸின் மருமகன் கொண்டு வந்த மதுவை 3 பேர் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில், அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. குடும்ப உறுப்பினர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு […]

பற்றி எரியும் இந்தோனேசியா… நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள ஒரு மாகாணத்தின் உள்ளூர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் சம்பளத்துடன் கூடுதலாக, வீட்டு வசதிக்கென்று தனியாக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, விலைவாசி மற்றும் வரி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்கள், அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிராக, தலைநகர் ஜகர்த்தாவில், கடந்த ஆக.25 ஆம் தேதி […]

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

தில்லி பிரீமியர் லீக்கில் திவ் வேஷ் ரதி ஓவரில் சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ரானா விடியீ வைரலாகி வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தினால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லி பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் போட்டியில் வெஸ்ட் தில்லியும் சௌத் தில்லியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌத் தில்லி 20 ஓவர்களுக்கு 201/5 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60, அனுமோல் சர்மா 55, […]

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஜம்மு – காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து […]

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் திராவிட் விலகியுள்ளார். ஐபிஎல் 2026-க்கு முன்பாக டிராவிட் இந்த முடிவினை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டார். அவருக்கு காலில் காயமடைந்தாலும் அணியை வீல் சேரில் வந்து வழிநடத்தினார். சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விலகி சிஎஸ்கேவில் இணைவதாக வதந்திகள் பரவிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: Your […]

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய முப்படைகள் இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய விடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. புது தில்லியில் இன்று நடைபெற்ற என்டிடிவி தற்காப்புக் கருத்தரங்கில், விமானப் படை ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய புதிய விடியோக்களை வெளியிட்டு அவற்றின் விவரங்களைத் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத […]