Sorting by

×

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டதாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். […]

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கேன்பெர்ரா, அடிலெய்ட், பெர்த், ஹோபர்ட் மற்றும் பிற இடங்களில் ‘ஆஸ்திரேலியாவுக்காக பேரணி’ என்னும் பெயரில் இந்தியர்களுக்கு எதிரான பிரசரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய […]

மதராசி படத்தின் விளம்பரதார நிகழ்வு – புகைப்படங்கள்

படத்தின் நாயகி ருக்மினி வசந்த். படத்தின் படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன். ரசிகர்களை நோக்கி கை அசைத்த சிவகார்த்திகேயன். ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன். ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதிரடி திரில்லர் படமான மதராசி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நாயகி ருக்மணி வசந்த். ருக்மணி வசந்த். சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி எடுத்து கொள்ளும் ரசிகர்கள். ரசிகர்களை நோக்கி கை அசைக்கும் சிவகார்த்திகேயன். நடனமாடும் […]

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த விடியோவில், பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் ஒரு நபர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவமதித்து ஹிந்தியில் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி இன்று (ஆக. 31) கான்பூரில் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல் […]

அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தனியார் பள்ளியில் 62.1 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன். திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், […]

இந்தியா – சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயலர்

இந்தியா – சீனா இடையே நிலையான உறவால் இருநாட்டு 280 கோடி மக்களுக்கும் பயன் கிட்டும் என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள நிலையில், அதனிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து, இன்று (ஆக. 31) செய்தியாளர்களுடன் பேசிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “இரு நாடுகளும் தங்கள் உள்நட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் […]

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று […]

மறுஅறிவிப்பு வரும் வரை… அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு எதிரொலியாக ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கடந்த ஆக. 22-இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அவை மட்டும் அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த […]

குடியரசுத் தலைவர் செப். 2 தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப். 1)முதல் செப். 3 வரை 3 நாள் பயணமாக கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வருகை தரவிருக்கிறார். இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், செப். 1-ஆம் தேதி, கர்நாடகத்தின் மைசூரில் நடைபெறும் அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். செப். 2-ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன […]

கார், அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பரோடா வங்கி

புது தில்லி: பண்டிகை காலங்களையொட்டி, தாங்கள் வழங்கும் கார் மற்றும் அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை, பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் 100 அடிப்படை புள்ளிகள் குறைப்பைத் தொடர்ந்து வங்கி செயல்படுத்திய விகிதக் குறைப்புகளுக்கு கூடுதலாக இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பண்டிகை காலங்களையொட்டி, தாங்கள் வழங்கும் கார் மற்றும் அடமானக் […]