Sorting by

×

வடசென்னை 2 அப்டேட் – வெற்றிமாறன் அறிவிப்பு!

வ்டசென்னை 2 படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 2018 ஆம் ஆண்டில் வெளியான வடசென்னை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான வடசென்னை 2 – அன்புவின் எழுச்சிக்காக ரசிகர்கள் நீண்டகாலமாகவே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், வடசென்னை 2 படத்தின் அறிவிப்பு குறித்து வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அடுத்த […]

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அமெரிக்காவைத் தனது […]

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரான ஜக்தீப் தன்கர், கடந்த 1993 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கார் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு வரை ஜக்தீப் தன்கருக்கு வழங்கப்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியமானது, அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நிறுத்தி […]

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; உயரும் விலைவாசிகள் – என்ன தான் காரணம்?

வரலாறு காணாத அளவுக்கு நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ரூ.88 ஆக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எதனால்… அடுத்து என்ன ஆகும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். இந்திய ரூபாய் Vs அமெரிக்க டாலர் ஏன் இந்திய ரூபாய் சரிகிறது? இந்தியாவிற்குள் வரும் அந்நிய முதலீடுகள் தற்போது குறைந்துள்ளது. மேலும், ஏற்கெனவே இங்கே செய்திருந்த முதலீடுகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்து செல்கின்றனர். இதனால், […]

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் வழக்குரைஞராக பணிபுரிய சட்டம் படித்த திருமணமாகாத ஆண், பெண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: JAG Entry Scheme (123rd) காலியிடங்கள்: ஆண்கள் 5, பெண்கள் 5 வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி : குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பதிவி செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் […]

லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்துள்ள லோகா திரைப்படத்துக்கு கூடுதலாக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ’லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் லோகா சேப்டர் 1. ஆக்ஷன் – சாகச பின்னணியில் சூப்பர்வுமன் கதையாக உருவான இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். ஓணம் வெளியீடாக ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் […]

கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!

கொச்சியில் உள்ள ஒரு வங்கியின் உணவு விடுதியில் மாட்டிறைச்சி சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என வங்கி மேலாளர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கியின் வட்டார மேலாளராக பிகாரைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் பொறுப்பேற்றார். இவர் வங்கி ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கியின் உணவு விடுதியில் மாட்டிறைச்சியை சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என உத்தரவிட்டார். வங்கி மேலாளரின் உத்தரவுக்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

17 ஆண்டுகளில் முதல்முறை… தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

17 ஆண்டுகளில் முதல்முறையாக தஜிகிஸ்தான் அணியை இந்திய கால்பந்து அணி வீழ்த்தியுள்ளது. சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் குரூப் பி அணியில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் நேற்று இரவு மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என வென்றது. போட்டியின் 5-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் அன்வர் அலியும் 13-ஆவது நிமிஷத்தில் சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து அசத்தினார்கள். […]

திருப்பூரில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்த பெண் மீட்பு: காவலர் திவ்யாவுக்கு பாராட்டு

திருப்பூர்: திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், நடைமேடைக்குமான இடைவெளியில் பெண் ஒருவர் விழுந்த நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் துரிதமாக செயல்பட்டு பெண்ணை பத்திரமாக மீட்டார். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை மன்னார் குடியில் இருந்து கோவை செல்லும் ரயில் வந்தது. அந்த ரயில் திருப்பூர் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று புறப்பட்டபோது, திருப்பூரை சேர்ந்த சுசீலா (58), தனது 10 வயது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார். […]

“அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டிவிட்டாலே போதும்!” – செல்லூர் ராஜு

மதுரை: அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜக வினரை தூண்டிவிட்டாலே போதும், பழனிசாமி உறுதியாக முதல்வராகி விடுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செப். 1 முதல் 4-ம் தேதி வரை மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் மேற்கொள்வதையொட்டி மதுரை காளவாசலிலுள்ள மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் […]