சென்னையில் சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த அதிகனமழையால், அதிலும் குறிப்பாக, ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு, மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேக வெடிப்பு காரணமாக சென்னையில் அதிகனமழை பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் […]
Month: August 2025

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!
கு. இராசசேகரன் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியின் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 31) மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 29,360 […]

சீன அதிபருடன் பயனுள்ள சந்திப்பு! -பிரதமர் மோடி
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருடனான சந்திப்பு மிக்க பயனுள்ளதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, அவர் தமது எக்ஸ் தளப் பதிவில், “ஷாங்காய் ஒத்துழைப்பு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது தியான்ஜினில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடந்தது. கசானில் நடந்த எங்கள் கடைசி சந்திப்பிலிருந்து இந்தியா-சீனா உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் […]

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
ரயில் பெட்டியில் பயணி தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள், பணம், செல்போனை ரயில்வே போலீசார் மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனர். கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் வந்துள்ளார். கோவை ரயில் நிலையம் வந்ததும் தங்களது பொருள்களுடன் இறங்கினர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் இருந்த ஒரு கைப் பையை ரயிலிலேயே […]

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார். தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லியும் ஈஸ்ட் தில்லியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் 139/8 ரன்கள் எடுத்தது. அர்பித் ரணா 50 ரன்கள் எடுத்து அசத்தினார். மனம் பரத்வாஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து […]

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?
நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா – 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் […]

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிக்குப் பின், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இருப்பதாக வெளியான தகவலுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் பிகாரில் சுமார் 15 தொகுதிகளில் 67,826 போலி வாக்காளர்கள் இருப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து, இன்று(ஆக. 31) பிகார் மாநில தலைமை தேர்தல் அலுவலர் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள எக்ஸ் […]

மத்தியில் இழுபறி ஆட்சி அமைத்ததே நிதியமைச்சர் கூறிய மாற்றம்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை இந்தியா கூட்டணி முறியடித்து இழுபறி நிலையில் ஆட்சி அமைத்ததே பெரிய மாற்றமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (31.08.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் […]

எம்.பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
திருவள்ளூர்: மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கக்கோரி, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த காங். எம்பி சசிகாந்த் செந்தில், மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய அரசு, ”சமக்ர சிக் ஷா அபியான்” (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலை திருவள்ளூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை […]

சென்னையின் 2 குப்பை கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்
சென்னை: சென்னையின் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 426 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், […]

