Sorting by

×

தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.1) லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் […]

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் குதிர. காதல், திருமணம் என நகைச்சுவை பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இதனை, ஞஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேள படத்தை இயக்கிய அல்தாஃப் சலீம் எழுதி இயக்கியுள்ளார். கல்யாணி பிரியதர்ஷினி, ரேவதி பிள்ளை, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ஓணம் […]

சீனாவில் ட்ரோன் விளக்குகளால் வரவேற்கப்பட்டாரா மோடி? உண்மை என்ன?

சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரோன் விளக்குகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படங்கள் குறித்து உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை, பாஜகவினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பகிரப்படுவதாகவும், மார்ச் மாதம் சீனாவில் நடந்த ட்ரோன் வண்ண விளக்கு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்து பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு […]

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், தொடுபுழாவில் பிரபல யூடியூபர் ஷாஜன் ஸ்காரியா நேற்று மாலை அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஸ்காரியாவின் வாகனத்தை மறித்து, அவரைத் தாக்கியுள்ளார். அதோடு அவரைக் கொலை செய்யவும் முயன்யுள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம் இந்த சம்பவம் […]

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் தவினா பெர்ரின் அதிவேகமாக சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆடவர் பிரிவிலும் சேர்த்து ஒரு பந்து அதிகமாக பிடித்து, இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியும் லண்டன் ஸ்பிரிட் வுமன் அணியும் மோதின. இந்தப் போட்டியில், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை தவினா பெர்ரின் (18 வயது) 42 பந்தில் […]

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை – விஜய்

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு […]

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை திமுக அரசு புறக்கணித்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான […]

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

தமிழக காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் இன்று (ஆக. 31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, டிஜிபி பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்க, கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது. ஜி. வெங்கடராமன் […]

நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை திங்கள்கிழமை முதல் (செப். 1) டாஸ்மாக் நிா்வாகம் அமல்படுத்தவுள்ளது. மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு […]

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை – யார் இவர்?

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆளும் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த அஹ்மத் அல்-ரஹாவி கொல்லப்பட்டுள்ளார் என ஹௌதிக்கள் அறிவித்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹௌதியின் உயர்மட்ட தலைவர் இவர். கடந்த வியாழன் அன்று […]