சென்னை: திமுகவின் தோல்வி மாடல் ஆட்சியில், தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பழிபோடுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார். Disclaimer :- […]
Month: August 2025

பரமக்குடி அருகே கார்-மினி லாரி மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில் காரும், மினி லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பவர் தனது குடும்பத்தார் ஜமுனா (55) ரூபினி(30) சரண்ராஜ் (30) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தார். காரை மணக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) என்பவர் ஓட்டி வந்தார். Disclaimer :- This story is generated by computerised program and has not […]

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா மீதான வரிவிதிப்பால், இந்தியாவில் செயல்படும் அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. 145 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் இழப்புகளையும் கடும் சவால்களையும் ஏற்படுத்தும். மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட், […]

ஜம்மு – காஷ்மீர் வெள்ளம்: 12 மணி நேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்!
ஜம்மு – காஷ்மீரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளமுடைய பாலத்தை 12 மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர். தற்போது, ராணுவத்தினர் கட்டிய பெய்லி பாலத்தின் வழியே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27ஆம் தேதி மேக வெடிப்பு நேர்ந்தது. இதேபோன்று, 27ஆம் […]

ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் புதிய படம்!
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக பிளாக் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக […]

உத்தமபாளையம்: இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் நடுமாடு, கரிச்சான் சிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஜோடி மாடுகளுடன் கலந்து கொண்டனர். கோம்பை முதல் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு வரையில் சென்று திரும்புவகையில், எல்லை பந்தயம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் […]

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு
சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக ஒருமணி நேரத்தில் 271.5 மி.மீ மழை அளவு கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. 11 மணிக்கு தொடங்கிய மழை ஒருமணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக வடசென்னையில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் […]

யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (21 வயது) செல்ஸி அணிக்கு நிரந்தரமாக மாறியுள்ளார். யுனைடெட் அணியிலிருந்து விலகிய இவருக்கு சுமார் 40 மில்லியன் பவுன்ட்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.476 கோடி) கிடைத்துள்ளது. ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ! ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 21 வயது இளம் கால்பந்து வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்தார். இளம் வயதிலிருந்தே யுனைடெட் அணியில் இருந்த இவர் தற்போது […]

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமனம்!
தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர். இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார். 1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் […]

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த 15 வயது சிறுவன் கைது
கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோவை போதனூர் – இருகூர் இடையே சென்ற சரக்கு ரயிலின் இயந்திர கண்ணாடி மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் போதனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. சம்பவத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் […]
