Sorting by

×

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் நிகழ்த்தியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்த சாதனையை படைத்துள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிகேஆர் (டிரின்போகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு விளையாடி வருகிறார். முதலில் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களுக்கு 163 / 9 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டிகேஆர் […]

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு

சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி தொடங்கியது. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. மெரினா கடற்கரையில் மட்டும் 1,565 விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தைத் தொடர்ந்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. சுமார் 16,500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினர் 2,000 பேரும் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் […]

சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்’ – விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 450 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை மட்டுமல்லாமல் சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் ‘திருப்திப்படுத்தும் அரசியலின்’ பங்கு ஆகியவற்றையும் விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பல் மசூதி இந்தியா டுடே வலைத்தளம் கூருவதன்படி, […]

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

நாகாலாந்தின் மறைந்த ஆளுநர் இல.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். அப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆம் தேதி காலமானார். அந்த சமயத்தில் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு அவரால் […]

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் இருதரப்பு உறவில் சலசலப்பு நிலவும் சூழலில், பிரதமரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் […]

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக ராம்பன் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ராம்பன் – தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள், சொத்துகள் சேதமடைந்துள்ளன. பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட குல்மார்க் பகுதியிலுள்ள நல்லா நதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், நதியின் இரு கரைகளில் உள்ள மக்களும் போக்குவரத்து இன்று தனித்துவிடப்பட்டுள்ளனர். கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலை – தோடா […]

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை பாராட்டிப் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெற்றிகரமாக நடத்தும் சீன அதிபர் ஜின் பிங்குக்கு பாராட்டுகள். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேம்படுத்தி, முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளோம். 280 கோடி மக்களின் நலன், நமது இருதரப்பு ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்லையில் படைகள் திரும்பப் பெறப்பட்ட […]

எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர், அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் பலரும், ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  எதிர்க்கட்சிகள் அவர்  எங்கே உள்ளார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜக்தீப் தன்கர் இந்நிலையில் ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் […]

“947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்…”- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை வாக்காளர்கள் போன்ற முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் பேசினார். குறிப்பாக ஒரு ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள், மற்றொரு வீட்டில் 46 வாக்காளர்கள், ஒரு மதுபான ஆலை முகவரியில் 68 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார். இது இந்தியா முழுவதும் பல்வேறு […]

நாதக ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை: சீமான் கருத்து

திருத்தணி: திருத்​தணி அருகே நாம் தமிழர் கட்​சி​யின் சார்​பில் மரங்​களின் மாநாடு நடை​பெற்​றது. நான் ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறை தண்​டனை விதிக்​கப்​படும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார். சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் நாம் தமிழர் கட்சி சார்​பில் மரங்​கள் தினத்தை கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. திருத்​தணி அருகே அருங்​குளம் பகு​தி​யில் உள்ள மனிதநேய தோட்​டத்​தில் மரங்​களுக்கு இடை​யில் மரங்​களின் மாநாடு எனும் தலைப்​பில் நேற்று நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் […]