Sorting by

×

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட […]

Sudan: இரக்கமில்லாத மனிதர்கள், ரத்த ஆறு; சூடான் உள்நாட்டுப் போரில் RSF நடத்தும் கொடூர இனப்படுகொலை

சூடான் உள்நாட்டுப் போர் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் கற்பனைக்கெட்டாத கொடூரங்கள் அரங்கேறி வருவதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அல் பாஷிர் நகரில் திட்டமிட்ட கொலைகள் மூலம் இனஅழிப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 2023 முதல் நடைபெற்று வரும் `விரைவு ஆதரவுப் படைகள்’ (RSF) என்ற துணை ராணுவ அமைப்புக்கும் சூடான் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருகின்றன. இவை 2003 முதல் 2005 வரை […]

அதிமுக: 9 மாத பனிப்போர்; திடீர் டெல்லி பயணங்கள்! – செங்கோட்டையனின் நீக்கமும் பின்னணியும்!

‘செங்கோட்டையன் நீக்கம்!’ அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்புக்கு பின்னால் 9 மாத பனிப்போரின் கதை இருக்கிறது. இத்தனை மாதங்களாக அவ்வபோது பற்றி எரிந்து பொசுங்கிக் கொண்டிருந்த செங்கோட்டையன் விவகாரத்திற்கு எடப்பாடி இப்போது ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார். செங்கோட்டையன் கட்சிக்குள் எடப்பாடியை விட ரொம்பவே சீனியர் செங்கோட்டையன். அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலேயே எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டு எம்.எல்.ஏ […]

“வட மாநிலத்தவர்கள் தமிழகம் வர மோடியே காரணம்” – திமுக மாணவரணி செயலாளர் குற்றச்சாட்டு

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம்தான் பிஹார், உத்திரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடலிபுத்திரம் போய் இந்தியர்களாக ஒன்றிணைந்து நாட்டைக் காப்போம் என்கிறார் ஆனால், வெறுப்புப் பேச்சால் வளர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டின் பிரதமரான மோடியோ, ஐ.நா-வில் தமிழைப் பேசுகிறேன். […]

“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” – அண்ணாமலை

சென்னை: “சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்” என கோவையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். திமுக தலைவர்கள் […]

ஸ்டாலின் மீது குறிவைத்து ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ – மோடியின் ‘பிஹார்’ கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை

சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, 'ஆப்ரேஷன் எம்கேஎஸ்' என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது: "மோடியின் பேச்சு, பிஹார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரச்சாரத்தின் மூலமாக வாக்குகளைப் […]

“இனவெறி பாகுபாட்டின் உச்சம்” – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், மறுபக்கம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், […]

“மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்” – அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர். செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் […]

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் […]

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை!

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் […]