Sorting by

×

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ”கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் இரா.கண்ணன், தான் கூடுதலாக கவனித்து வந்த மாநில மனித உரிமைகள் ஆணைய செயலர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். அவர் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அம்ரித், கால்நடை பராமரிப்பு, […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: பழனிசாமி அதிரடி நடவடிக்கை

சென்னை: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டார். இதனால் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் […]

தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவியேற்பு; `சமூக நீதியா? இடைத்தேர்தல் நகர்வா?’ – பாஜக விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் கேப்டனுமான முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, சூதாட்ட குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) 2000ஆம் ஆண்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட அசாருதீன், 2009ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கினார். அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம் மொராதாபாத் தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்றார். முகமது அசாருதீன் ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அதிரடி; காரணம் என்ன?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன் இந்நிலையில் தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கை கீழே… […]

மருத்துவர் பற்றாக்குறையை போக்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை: ஓபிஎஸ்

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து நானும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர், மருந்து, மருத்துவத்திற்கான மருத்துவமனையிலும் இருந்தால்தான் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்ற நிலையில், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருவதும், இதன் காரணமாக […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர். Disclaimer :- This story is generated by computerised program […]

‘வட மாநிலத்தோரை வசைபாடி வன்மம் கக்கும் திமுக’ – முதல்வர் ஸ்டாலின் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

சென்னை: ‘வட மாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிஹாரில் தேர்தல் காலம் வந்தால் வட மாநிலத்தவர்களைப் ‘பிரதர்’ எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இன்று தமிழர்கள் – பிஹாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து […]

“என்னால் திமுகவுக்கு கெட்ட பெயர் வராது” – அமலாக்கத் துறை விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

திருச்சி: “என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எந்த கெட்ட பெயரும் ஏற்படாது” என வாக்குச்சாவடி கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நக​ராட்சி நிர்​வாக துறை​யில் அரசு பணி வழங்​கிய​தில் முறைகேடு​கள் நடந்​திருப்பது தொடர்​பாக விசா​ரணையை தொடங்​கு​மாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை கடிதம் அனுப்பிய நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. […]

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது யாருக்கு பலம்? – நயினார் நாகேந்திரன் கருத்து

திருநெல்வேலி: ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது யாருக்கு பலம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும் எனவும், தமிழக முதல்வர் பிஹார் மக்களை தவறாக பேசியதைத்தான் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார் திருநெல்வேலி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம். […]

சென்னையில் மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. […]