உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்… கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக வரி என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ட்ரம்ப். அமெரிக்கப் பொருள்கள் மீது அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்கிறது… அமெரிக்காவில் பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறை உள்ளது… என்று உலக நாடுகள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சகட்டு மேனிக்கு வரிகளைப் போட்டு […]
Month: October 2025

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீதர் வாண்டையார் பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் இன்று […]

`இவர்கள் திமுக பி டீம்’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அண்ணா திமுக எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி திமுகதான் எங்களுக்கு எதிரி. எடப்பாடி என்ற துரோக மனிதர்தான் எங்கள் எதிரி” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் மதுரைக் கப்பலூரில் செய்தியாளர்களைச் […]

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம்
சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

பசும்பொன்: “துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்” – ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தினகரன் பேட்டி
பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று எழுச்சியாக நடந்து வருகிறது. முதலைமைச்சர், மதுரை கோரிப்பாளையத்தில் மரியாதை இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு […]

அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு மீண்டும் செக் வைத்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம். என்ன அது? இதுவரை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்களை தொடர்ந்து பணிபுரியும் அனுமதிக்க விண்ணப்பித்தால் போதும். தானாகவே அவர்களுக்கு பணிபுரிவதற்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டு தரப்படும். ஆனால், இனி அப்படி கிடையாது. தொடர்ந்து பணிபுரிவதற்காக விண்ணப்பித்திருப்பவர்களை இனி தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சோதிக்கப்படுவார்கள். அதில் தேர்வானால் மட்டுமே, அவர்களது பணி புரிவதற்கான அனுமதி நீட்டிக்கப்படும். இந்த நடைமுறை இன்று (அமெரிக்க நேரப்படி) முதல் அமலாகிறது. அக்டோபர் 30-க்கு […]

`செங்கோட்டையன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் எனில்.!’ – மூவர் சந்திப்பின் பின்னணி என்ன?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தநிலையில் இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்திருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இவர்களின் சந்திப்பு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு செங்கோட்டையன் + பன்னீர் செல்வம் + […]

குருபூஜை: “எடப்பாடிதான் எங்கள் எதிரி” – செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒன்றாக காரில் வந்துள்ளனர். இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினதினகரன் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஐயா அவருடைய சன்னதியில் அனைவரும் ஒருங்கிணைந்து […]

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு – சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பினிகளுக்கும், குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைகளில் இருந்து அந்த மருந்துகளை திரும்பப் பெற்று ஆய்வு செய்தபோது, அவை தரமற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதற்காக, […]

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?’ – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்செல்வன் இந்தியா முழுவதும், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் […]

