Sorting by

×

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 […]

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் – சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் கொள்ளை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி […]

“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது”- அமைச்சர் ஜெய்சங்கரின் ‘அபாய குறியீடு’ உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல… அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக […]

`செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!’- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். […]

திருமணம் தாண்டிய உறவு; மனைவியைக் கொன்று செல்பி எடுத்த கணவர் – கைது செய்த போலீஸ்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். பாலமுருகன் – ஶ்ரீ பிரியா கடந்த சில ஆண்டுகளாக  பாலமுருகன், ஶ்ரீ பிரியா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. ஶ்ரீ பிரியா கணவருடன் பிரிந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்காக காந்திபுரம் பகுதியில் உள்ள […]

பாமக: “கண்ணீர் வடிகிறேன்; கலங்கி நிற்கிறேன்” – நீதி கேட்டு போராட்டம் ; ராமதாஸ் அறிக்கை

“அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் டெல்லியில் டிசம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்படும்” – என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் , “நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து […]

ஆளுநர் மாளிகை: “சட்டமன்றத்தை மதிக்காதவர்களின் கண் துடைப்பா?” – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்’ பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்’ என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ‛ராஜ் பவன்’ பெயர்கள் ‛லோக் பவன்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை லோக்பவன் என்பதற்கு மக்கள் பவன் […]

வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா?

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வான்வெளிகள் மூடப்பட்டதாகக் கருத வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதை, காலனித்துவ அச்சுறுத்தல் எனக் கடுமையாக எதிர்த்துள்ளது வெனிசுலா அரசு. சட்டப்படி, ஒரு நாட்டின் வான்வெளியை மூடுவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவு, அந்தப் பகுதிக்கு விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, விமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்வதைத் தவிர்க்க வழிவகுக்கிறது. அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்பு கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, […]

ஆத்தூர் தொகுதியில் 7227 வாக்காளர்கள் நீக்கம்? – அமைச்சர் ஐ.பெரியசாமி புகார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது, ” நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை இடம்பெயர்ந்து விட்டார்கள்  (Shifted) என்று போடுங்கள்” எனச் சொல்லி சிறப்புச் சேர்க்கைப் பணியை இரவோடு இரவாக முடிந்து விட்டனர். புதிதாக சேர வருபவர்களையும் இடம் பெயர்ந்து விட்டார்கள் என்று […]

கர்நாடகா: புகையும் `ரகசிய ஒப்பந்தம்’ – மறுக்கும் ஆளும் தரப்பு – என்ன நடக்கிறது?

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது. அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என ‘ரகசிய ஒப்பந்தம்’ மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 […]