Sorting by

×

“அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் இதைச் செய்ய வேண்டும் எனச் சட்டம் இயற்றுவேன்” – சீமான் சொல்வது என்ன?

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை அதிகரிப்பதற்காக தேர்தலில் கூட்டணி வைப்பார்கள். சீமான் நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. என்னை நம்பியுள்ள 8 கோடி மக்களுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். என்னுடைய வெற்றி எப்போதும் எனக்கானதல்ல. அதேபோல என்னுடைய தோல்வியும் எனக்கானதல்ல. தமிழ்நாட்டில் தனியார் முதலாளிகள் லாபம் ஈட்டும் தொழிலாக கல்வி இருப்பதால், அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. போக்குவரத்து […]

`வழிக்கு வராத எடப்பாடி; பலிக்காத அமித் ஷா ஜாலம்; அமையாத மெகா கூட்டணி!’ – தடுமாறும் NDA?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி உருவாகி 200 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், இன்னமும் அதிமுகவும் பாஜகவும் மட்டுமே அந்தக் கூட்டணியின் பெரிய ஆட்டக்காரர்கள். எடப்பாடி அமைப்பதாக சொன்ன மெகா கூட்டணியும் அமையவில்லை. எந்த பிரமாண்ட கட்சியும் என்.டி.ஏவை தேடி வரவில்லை. மாறாக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக, அமமுக எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக் கொண்டு சென்று கபடி ஆடிக்கொண்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் தவெகவில் செட்டில் ஆகிவிட, பன்னீர்செல்வமும் தனிக்கட்சி தூபம் […]

“அன்புமணி எல்லாத்தையும் பறித்து விட்டாய்; வயிறு எரிஞ்சு சொல்றேன்” – கொதிக்கும் ராமதாஸ்; காரணம் என்ன?

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுவெளிக்கு வந்த பாமக தலைவருக்கும் அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையேயான மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. ‘பாமக’வைக் கைப்பற்றுவதில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் அதிகாரப் போட்டி கட்சியையே இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிகள் எல்லாம் மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை எனக் களமிறங்கியிருக்கின்றன. ஆனால், பாமக உட்கட்சி பிரச்னையால் சிதறிக்கொண்டிருக்கிறது. தலைவர் பதவி யாருக்குச் சொந்தம் எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் […]

Ditwah: இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு

இலங்கையில் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கிய மழை இன்னும் கொட்டித்தீர்த்து வருகிறது. இதோடு இப்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை வரலாறு காணாத பெரும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் 69 பேர் பலியாகி உள்ளனர். 34 பேரைக் காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என நேற்று இரவு இலங்கை பேரிடர் மேலாண் மையம் அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு Rain alert: டிட்வா புயல்; தமிழகத்தில் […]

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை’ செஞ்சுடுங்க!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் – ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்துவிட வேண்டும். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும். பான் – ஆதார் இணைப்பு ‘அங்கீகாரங்களா, ஆபத்துகளா?’ – என்ன தான் சொல்கிறது புதிய தொழிலாளர் சட்டம்? | […]

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு ஆதார் தரவுகளை மாற்றியமைத்து இருக்கிறது. இறந்துபோன 2 கோடி மக்களின் ஆதார் தகவல்களை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், பொது வினியோகத்துறை போன்றவற்றுடன் இணைந்து அவர்களிடமிருந்து […]

சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் – முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வீட்டிற்கு இன்று காலை துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்றிருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்தித்துக் கொள்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், இவர்கள் விஷயத்தில் நிச்சயம் இதை கவனித்தே ஆக வேண்டும். முதலமைச்சர் யார்? 2023-ம் ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, ‘சித்தராமையாவா… டி.கே.சிவக்குமாரா?’ – யாருக்கு கர்நாடகா முதலமைச்சர் பதவி என்கிற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. […]

‘அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பாஜக விரும்பவில்லையா?’ – திருமாவளவன் கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “சிறப்பு தீவிர திருத்தம் மூலம் (SIR) வாக்காளர் பட்டியலில் சீராய்வு செய்வதாக இருந்தால் பிரச்னை இல்லை. இவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருமாவளவன் சிஏஏ சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாததால் இப்படி செய்கிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் […]

`சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு!’ – கள்ளக்குறிச்சி ஆட்சியர்

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம்தான் `நல்ல சமாரியன்’ (Good Samaritan) திட்டம். அதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விபத்து […]

‘அங்கீகாரங்களா, ஆபத்துகளா?’ – என்ன தான் சொல்கிறது புதிய தொழிலாளர் சட்டம்? | Explained

புதிய தொழிலாளர் சட்டம் – இது கடந்த 21-ம் தேதி முதல், மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த சட்டத்தை ‘கப்சிப்’ என்று ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. அது ஏன்? இந்த சட்டம் என்ன சொல்கிறது? இது யாருக்கு சாதகம், பாதகம் என்பதை பார்க்கலாம். வாங்க… தொழிலாளர்களுக்கு என முன்பு 29 மத்திய அரசு சட்டங்கள் இருந்தன. இதை […]