“பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்…” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அஞ்சலி செலுத்தும் முருகன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார், தீக்குளிப்பை யாரும் செய்யக்கூடாது. தர்மத்தை காக்க வேண்டுமென்றால் உயிரோடு இருந்து […]
Month: December 2025

“என்னோடு நின்ற தம்பி இளமகிழன்” – உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?
“வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்” என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். நலத்திட்ட விழா மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். […]

வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் – காரைக்குடி தொகுதி யாருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள். தேர்தல் அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தின் முதன்மைத் தொகுதியான காரைக்குடியில் இம்முறை திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தலைமைக்கு வலியுறுத்தி வருவதோடு, தொகுதி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முக்கியப் புள்ளிகள் முதலமைச்சரின் குடும்பத்தினரையும், அறிவாலய பவர் செண்டர்களையும் சுற்றி சுற்றி வருகிறார்கள். தற்போது […]

‘கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!’- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?
சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர். சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் […]

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!
தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு […]

Tiruttani கொடூரம்: காரணம் என்ன? | Decode | Vikatan
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

கொதிப்பில் தொழிலாளர்கள் – வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK| Imperfect Show
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?’ – அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது, “எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட […]

“இன்ஜின் இல்லாத கார் திமுக; அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை உண்டு. அவர்களுக்கு வீடு தேடி பதவி தருவோம். திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் வாழ்கிறது. உதயநிதி ஸ்டாலின், மு.க. […]

வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: “யாருக்காக இந்த ஆட்சி?” – தவெக தலைவர் விஜய் கேள்வி!
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வடமாநில இளைஞரை கொடூரமாக […]

