இந்தியாவின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவருக்கும் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா என்பவருக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரைஹான் வத்ரா என்ற மகனும், மிராயா வத்ரா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சியதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரைஹான் வத்ரா அவிவா பெய்க் என்றப் பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் […]
Month: December 2025

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை – எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்
ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன. உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதே மாதிரி இந்த ஆண்டு மாற்றங்களை முன்னெடுத்து பல நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இந்த ஆண்டு போராட்டங்களையும், புரட்சிகளையும் முன்னெடுத்தது பெரும்பாலும் ஜென் Z-யினர். இனி இந்த ஆண்டு (2025) நடந்த போராட்டங்களைப் பார்ப்போம். Mali | […]

நாளை கடைசி நாள்! ரேஷன் அட்டையில் இன்னும் கைரேகை பதியவில்லையா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது?
ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். – இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்னும் பலரும் இதை செய்யவில்லை. எனது குடும்ப உறுப்பினர் வெளியூரில் இருக்கிறார்… வெளி மாநிலத்தில் வேலை பார்க்கிறார் என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. இவர்கள் எல்லாம் இப்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்று – மத்திய அரசின் உத்தரவின் படி, AAY மற்றும் […]

‘அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!’ – தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் […]

பிம்ப அரசியலின் மறுபக்கம் – தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 2
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தமிழக அரசியல் அரியணை : மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 1 கருணாநிதியின் அரசியல் சாணக்யத்தனமும், எதற்காகவும் தன் தலைமையை விட்டுக்கொடுக்காத குணமும் நாடறிந்த ஒன்று. எதிர்காலத்தில் தன் தலைமைக்குப் போட்டியாக வருவான் எனத் தெரிய வரும் கட்சியின் கடைநிலை தொண்டனுக்கும் […]

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் […]

“விஜய், நாவை அடக்கிப் பேச வேண்டும்; நாங்கள் களத்தில் இல்லையென்று சொல்வதா?” – பொங்கும் செல்லூர் ராஜூ
“நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை..” என்று கொந்தளித்துப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், “பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தாலும் எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை. பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் தனக்குத்தானே சொல்லக்கூடாது, பெண்களும் பொதுமக்களும் சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது. தற்போது குழந்தைகள் […]

Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த ‘ஜனநாயகப் போராளி’ கலிதா ஜியா?
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள் உட்பட பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ஜியாவுர் ரஹ்மான் – கலிதா ஜியா யார் இந்த கலீதா […]

நம்ப வைத்து கைவிட்ட திமுக; போராட்டமயமாகும் தமிழகம் – வெற்று பாராட்டு விழாக்கள் தேவைதானா முதல்வரே?
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் பெண்கள், Vibe with MKS என தன்னுடைய ஆட்சிக்கு தானே பாராட்டு விழாக்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி புலகாங்கிதம் அடைந்து ரொம்பவே ஜாலியாக இந்த ஆட்சியின் கடைசி நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆனால், அவரளவுக்கு தமிழகம் மகிழ்ச்சியாக இல்லை. தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இல்லை என்றே நடக்கும் போராட்டங்களும் அதை முடக்க நினைக்கும் அரசு இயந்திரங்களும் நமக்கு காட்டுகின்றன. ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், […]

ரஷ்யா – உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
2026-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வந்தால், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் போரை நிறுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சமீபத்தில், இரு தரப்பும் ட்ரம்ப் முயற்சிகளுக்கு பாசிட்டிவ் சிக்னல் காட்டி வருகின்றன. புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அது உக்ரைனின் வேலை என்றும் […]

